என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாஜ் மகால்"
- சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்தனர்
- கங்கை நீரை ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
தனது மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.
தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபையை [ABHM] சேர்ந்த சேர்ந்த சியாம்பாபு சிங், வினேஷ் சவுத்ரி என்ற இரு இளைஞர்கள் தாஜ் மாலின் உள்ளே மும்தாஜ் -ஷாஜகானின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைப் பகுதியில் கங்கை நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அங்குள்ள சுவர்களில் ஓம் ஸ்டிக்கர்களையும் ஒட்டியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இருவரும் தண்ணீர் பாட்டில்களில் கங்கை நீரை எடுத்து வந்து, கல்லறை அமைந்துள்ள தரைதளத்தின் கதவைப் பூட்டிவிட்டு கங்கை நீரை அங்கு ஊற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது. இதனையடுத்து இருவரையும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூலை30 ஆம் தேதி, மீனு ரத்தோர் எனும் பெண் ஒருவர் 'கன்வார்' ஒன்றை தோளில் சுமந்துகொண்டு தாஜ்மஹாலில் அத்துமீறி நுழைய முயன்றார். தடுத்து நிறுத்திய காவலர்களிடம், தான் அகில பாரத இந்து மகா சபாவின் மாவட்டத் தலைவர், தாஜ்மஹால் முன்பு தேஜோ மஹால் எனும் சிவன் கோவிலாக இருந்தது என்றும் சிவபெருமான் தன் கனவில் வந்து அவரது கோவிலில் கங்கை நதியின் புனித நீரை தெளிக்க சொன்னார் என்று கூறிய பெண் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.