என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய ஆண்கள் அணி"
- காம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
- அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சுபாவம் குறித்து அவரது இளமைக்கால கிரிக்கெட் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

காம்பீரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வரும் பரத்வாஜ், 12 -13 வயது சிறுவனாக இருக்கும்போது கூட காம்பீர் சிறிய தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாதவராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமல்ல இப்போதும் காம்பீர் ஒரு அப்பாவியான சிறுவன்தான். அவரால் பிறருக்கு தீங்கு நினைக்கவே முடியாது. ஒரு 12 வயது பையன் போலவே இப்போதும் அவர் உள்ளார்.

பலர் அவர் திமிர்பிடித்தவர் என்று கருதுகின்றனர். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அது தொடர்புடையது. சிறு வயதில் நெட்டுக்குள் அவரை நான் விளையாட வைப்பதுண்டு. அந்த மேட்ச்களில் தொற்றால் கூட காம்பீர் அப்படி அழுவார். அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

- 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒன்றாக இருந்தனர்
- என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களிடம் நான் தொடர்வில் உள்ளேன்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் 10 வருடங்களாகப் பேசவில்லை என ஹர்பஜன் சிங் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஹர்பஜனும் எம்எஸ் தோனியும் ஒன்றாக செயல்பட்டவர்கள்.
இந்நிலையில் 2018-2020 வரை சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாடிய காலங்களில் தானும் எம்.எஸ் தோனியும் மைதானத்தில் பேசினோமே தவிர களத்திற்கு வெளியே பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

'அவருடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என் போன் காலை அட்டென்ட் செய்பவர்களுக்கு மட்டுமே நான் போன் செய்வேன், மற்றவர்களிடம் பேச எனக்கு நேரமில்லை. என்னுடன் நண்பர்களாக இருந்தவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். உறவு என்பது இருவருக்கிடையிலான கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்டது.
நான் உங்களுக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், பதிலாக நீங்கள் எனக்கும் மதிப்பளிப்பீர்கள் என்று நான் நம்ப வேண்டும், அல்லது எனக்கு பதில் அளிப்பீர்கள் என்றாவது உறுதியாகத் தெரிய வேண்டும்.

நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை போன் செய்தும் நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், நான் உங்களை தேவை இருந்தால் மட்டுமே சந்திப்பேன் மற்றபடி எதுவும் இல்லை என்று ஹர்பஜன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.
- ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.
தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 5.3 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தபோது மழை திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

மீண்டும் மழை குறுக்கிட்டதால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார். நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா சார்பில் களமிறங்கிய உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லபுசனே 12 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக ஸ்டீவன் சுமித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் இருவருமே சதம் விளாசி உள்ளனர்.

தற்போது ஸ்மித் 101 ரன்களுடன் பும்ரா வீசிய பந்தில் ரோகித்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார், டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தில் ரிசஷப் பந்துக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளும், நிதிஷ் குமார் ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 87 ஓவரில் 335 ரன்கள் எடுத்துள்ளது
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.
ராஜ்கோட்:
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.
இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.