என் மலர்
நீங்கள் தேடியது "ஆபத்துகள்"
- கருக்குழாயில் கரு தங்கும் முறைக்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர்.
- அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம்.
கருக்குழாயில் கரு தங்கும் முறை எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கர்ப்பத்தின் போது கருவுற்ற முட்டை கருப்பையுடன் இணைக்காது.
சில நேரங்களில் கருவானது ஃபெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத்தொடங்குகிறது இதை கருக்குழாய் கருத்தரிப்பு என்று சொல்லப்படும்.
சில நேரங்களில் இன்னும் அரிதாக கருப்பை வாய் அடி வயிறு அல்லது கருப்பையிலும் வளரலாம். இது கவலைக்குரிய நிலை என்பதோடு வலி, ரத்தப் போக்கு, வெடிப்புகளை உண்டாக்கி விடக்கூடும் என்பதால் இந்த கருக்குழாயில் குழந்தை தங்கும் ஆபத்து குறித்து முழுமையாக அறிவது அவசியம்.

காரணங்கள்:
* முந்தைய கர்ப்பம் எக்டோபிக் கர்ப்பமாக இருந்தால்
* தொற்று அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஃபெலோப்பியன் குழாய்களின் வீக்கம் மற்றும் வடு
* ஹார்மோன் காரணிகள்
* மரபணு அசாதாரணங்கள்
* பிறப்பு குறைபாடுகள்
* ஃபலோபியன் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் வடிவம் மற்றும் நிலையை பாதிக்கும்
* புகைபிடிப்பது
அறிகுறிகள்
* இடுப்பு, தோள்பட்டை அல்லது கழுத்து பகுதியில் கூர்மையான வலி
* அடிவயிற்றின் பக்கத்தில் ஏற்படும் கடுமையான தாங்க முடியாத வலி
* லேசானது முதல் கனமான யோனி போக்கு
* மயக்கமான உணர்வு
* மலக்குடல் அழுத்தம் உணர்வு
* கருவுற்று இருக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை தாமதிக்காமல் தொடர்பு கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சை அவசியம்.
இந்த எக்டோபிக் கரு குறித்த சந்தேகம் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடல் பரிசோதனை மூலம் எக்டோபிக் கர்ப்பத்தை கண்டறிய முடியாது.

டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் யோனிக்குள் சிறிய கருவி செருகப்படும். அப்போது மருத்துவர் கருப்பையில் கரு உள்ளதா என்பதை பார்க்க முடியும்.
உங்கள் ஹெச். சி. ஜி. மற்றும் புரோஜெஸ்ட்ரான் அளவை கண்டறிய மருத்துவர் ரத்த பரிசோதனையை பயன்படுத்தலாம். இது கர்ப்பகாலத்தில் இருக்கும் ஹார்மோன்கள் ஆகும்.
இந்த ஹார்மோன் அளவு குறைய ஆரம்பித்தால் அல்லது ஒரு சில நாட்களில் ஒரே மாதிரியாக இருந்தால் அல்லது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் கர்ப்பகால சாக்கு அதாவது அம்னோடிக் திரவம் இல்லையென்றால் அது கருக்குழாயில் கரு தங்கியதற்கான காரணம் ஆகும்.

கருக்குழாய் கரு தங்கினால் உண்டாகும் ஆபத்துகள்?
கருமுட்டை விந்தணுக்களுடன் இணைந்து கருக்குழாயில் தங்கி பிறகு அதன் வழியாக பயணித்து கருப்பைக்குள் உள்வைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் கரு வளர்ச்சி சீராக இருக்கும்.
கரு ஃபலோபியன் குழாய் வழியாக மட்டுமே வளர்ந்தால் கரு வளராது. அதனோடு கருக்குழாயும் வெடிக்க செய்யலாம்.
மேலும் தீவிர நிகழ்வுகளில் உடைந்து கடுமையான உள் ரத்தப்போக்கு ஏற்படலாம். சற்று அலட்சியம் செய்தாலும் அவை உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
இந்த கருவானது தாய்க்கு பாதுகாப்பானது அல்ல. மெலும் கருவை கர்ப்பகாலம் முழுவதும் வளர்க்க முடியாது. தாயின் உடனடி ஆரோக்கியம் காக்க உடனடியாக கருவை அகற்றுவது அவசியம்.
இந்த சிகிச்சை முறையில் எக்டோபிக் கர்ப்பம் இருக்கும் இடம் மற்றும் அதன் வளர்ச்சியை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.
சில நேரங்களில் கருக்குழாயில் கரு வளர்ச்சியை பொறுத்து அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அறுவைசிகிச்சை நிபுணர்கள் கருவை அகற்றி ஃபலோபியன் குழாய் சேதத்தை சரி செய்ய பரிந்துரைப்பார்கள். இது இலேபரோடமி என்று அழைக்கப்படுகிறது.
- வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
- மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஆல்கஹால் என்ற சொல் 'அல்குஹ்ல்' என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. தற்போது மது வகைகள் அனைத்தும் ஆல்கஹால் எனப்படுகிறது. ஆல்கஹாலின் வீரியத்தை அது உடலுக்குள் சென்ற பின் ஏற்படுத்தும் விளைவுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.

வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படும் ஆல்கஹால் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இதற்கு காரணம் இது அதிக கொழுப்பில் கரையக் கூடியது மற்றும் உடலின் தசைகளில் விரைவாக பரவக்கூடியது. குறிப்பாக வயிற்றில் இருந்தும், சிறுகுடலில் இருந்தும் விரைவாக உறிஞ்சப்படுகிறது.
உதாரணமாக 60 மி.லி. ஆல்கஹாலை வெறும் வயிற்றில் சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், ஒன்று முதல் 1½ மணி நேரத்திற்குள் ரத்தத்தில் கலந்து விடும். மேலும் 6 முதல் 8 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக ரத்தத்தில் இதன் தன்மை நீடித்து காணப்படும்.
ஆல்கஹாலின் மிக முக்கியமான பாதிப்பு மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் போது மனச்சோர்வு, பதற்றம் அல்லது நரம்பு பதற்றத்தை உருவாக்குகிறது.
ஒரு வித தூக்க கலக்கம், மந்தமான பேச்சு, மன குழப்பம், நிலையற்ற நடை, இரட்டை பார்வையை ஏற்படுத்துகிறது. உடல் மூளையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் உடல் மன ஒருங்கிணைப்பு இழப்பு ஏற்படுகிறது.
மது குடித்ததும், ஆல்கஹால் வயிறு வழியாக ரத்த ஓட்டத்தில் சேரும். ஒரு நபர் குடிக்கும் மதுவில் 20 சதவிகிதம் வயிற்றின் வழியாக ரத்த ஓட்டத்தில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. மேலும் 80 சதவிகிதம் ஆல்கஹால் சிறுகுடலால் உறிஞ்சப்படுகிறது.

ஆல்கஹால் ரத்த ஓட்டத்தை அடைந்தவுடன், அது கல்லீரலுக்குச் சென்று வளர்சிதை மாற்றமடைகிறது. ஆல்கஹால் மூலக்கூறுகளை உடைக்கும் நொதிகளைக் கல்லீரல் உற்பத்தி செய்கிறது.
வளர்சிதை மாற்றமடையாத (மெட்டபாலிசம் ஆகாத) ஆல்கஹால் உடலில் மீதம் இருக்கும். எஞ்சிய அனைத்தும் வியர்வை, சிறுநீர் மற்றும் உமிழ்நீர் மூலம் உடலை விட்டு வெளியேறுகிறது.
பொதுவாக, ஆல்கஹால் உடலில் பசியின்மை, கல்லீரல் சிதைவு, இரைப்பை, அமில சுரப்பை அதிகரித்து அழற்சியை அதிகரிக்கிறது. கடுமையான கணைய அழற்சியும் நாளடைவில் ஏற்பட்டு உடலின் பல்வேறு செயல்பாடுகளும் பாதிக்கும் நிலையை உருவாக்குகிறது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்பது இதனால் தான்.
- வாசனை திரவியத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
- பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.
தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை.
வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள். வெளிநாட்டு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.
உடலில் உள்ள வாசனை ஈர்ப்பை அதிகரிப்பது போல, வாசனை திரவியத்தில் ஒரு பயங்கரமான ஆபத்து மறைந்திருக்கிறது.

ஆய்வாளர்களின் கருத்துபடி வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனம் நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு பேக்கேஜிங் தயாரிப்பிலும் கூட பயன்படுத்தப்படுகிறது.
இந்த வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு, இதய நோய் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியை கூட பாதிக்கிறது. உடலில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் மூளையையும் பாதிக்கின்றன.

வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவது மனநிலையை மேம்படுத்தும் அதே வேளையில், அது ஆபத்தையும் உருவாக்கும்.
கூடுதலாக, உடலின் நாளமில்லா சுரப்பி அமைப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இனப்பெருக்கத்தை பாதிக்கிறது. ஹார்மோன், பிட்யூட்டரி, தைராய்டு மற்றும் மனநிலை ஊசலாட்டங்களும் ஏற்படலாம்.

நம்முடை சிறிய மாற்றங்கள் மூலம் பெரிய இழப்புகளை தவிர்க்கலாம். ரசாயனங்கள் இல்லாத பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இந்த மாற்றம் ஒரே நாளில் சாத்தியமில்லை. பழகுவதற்கு நீண்டகாலம் ஆகும். அதேபோல் துணிகளை துவைக்கும் போது வாசனை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதும் நல்லது.