search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்தனாத்"

    • கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
    • மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவை நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் சமீப காலமாக இந்து அமைப்புகள் கூறிவருகின்றன. மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடந்த தொடரப்பட்ட வழக்கை விசாரித்து மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது.

    கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் தரையின்கீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ணெதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் மசூதி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தத் தடை விதிக்க கோரி இந்து அமைப்புகள் அளித்த மனுவையும் நேற்றைய தினம் வாரணாசி கோர்டு தள்ளுபடி செய்தது. மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    கோரக்பூரில் நடத்த கருத்தரங்கு ஒன்றில் சிவனின் வடிவமான விஷ்வநாதர் தோன்றிய முன் கதையை கூறிய அவர், ஞானவாபி என்பதே கடவுள் விஸ்வநாதர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக அதை மக்கள் மசூதி என்று அழைக்கின்றனர். இஸ்லாமியர்கள் இந்த வரலாற்று தவறை திருத்திக்கொள்ள வேண்டும். ஞானவாபியின் சுவர்கள் உரத்து கதறுகின்றன. ஞானவாபிக்குள் ஜோதிலிங்கமும் கடவுளர்களின் சிலைகளும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

    • 'சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது'
    • 'குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம்'

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் பெற்ற வெற்றி அம்மாநில அரசியலிலும் பாஜகவுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் கான்பூர் நகரில் கடந்த வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசுகையில், சமாஜ்வாதி கட்சியினர் சிகப்புத் தொப்பி அணிகின்றனர். ஆனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் கருப்பாக உள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

     

     

    இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிகப்பு என்பது உணர்வுகளின் நிறம். கடவுள் துர்கையின் நிறம். ஆனால் தற்போது அவர்கள் [பாஜக] நமது தொப்பியைக் கிண்டலடித்து வருகின்றனர். எங்களது தொப்பியைக் கிண்டலடிப்பதற்கு முன் அவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது. எங்களின் செயல்கள் நல்லவிதமாக உள்ளன. குறைத்தபட்சம் எங்களின் தலையில் முடி உள்ளது, நாங்கள் தொப்பி அணிகிறோம். முடி இல்லாதவர்கள்தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி முதல்வர் யோகி ஆதித்தநாத்தை அகிலேஷ்யாதவ் மறைமுகமாகச் சாடியுள்ளார். 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1,36,463 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
    • 13.8 சதவீதம் ஆதரவு பெற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தில் உள்ளார்

    இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல்வர் யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1,36,463 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, 33 சதவீதம் பேர் [நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநில] முதல்வர் யோகி ஆதித்தநாத் சிறப்பாகச் செயல்படும் முதல்வராகக் கருதுகின்றனர். 13.8 சதவீதம் பேர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பாகச் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளனர். 9.1 சதவீதம் பேர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை விரும்புகின்றனர். அவரைத் தொடர்ந்து 4.7 சதவீத மக்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

     

    4.6 சதவீதம் பேர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர். உ.பி முதல்வர் 33 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தில் இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்ற 51 சதவீத ஆதரவிலிருந்து சறுக்கியுள்ளார். இதற்கு மக்களவைத் தேர்தல் தோல்வியும், தற்போது உ.பி பாஜகவில் ஏற்பட்டுள்ள விரிசலுமே காரணம் என்று கூறப்படுகிறது.   

    • தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார்.
    • இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று அந்த பெண் கேள்வியெழுப்பியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கலேரியா மால் வளாகத்தின் வெளியே கணவனுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணை பார்த்து ரேட் என்ன என்று தகாத முறையில் கேட்ட நபரால் அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    தனது கணவன் மற்றும் கணவனின் சகோதரனுடன் கலேரியா மால் வெளியே அந்த பெண் நின்றுகொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்த நபர் ஒருவர், உனது ரேட் என்ன என்று கேட்டு , எங்க அப்பா, மாமா எல்லாமே டி.எஸ்.பி என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் கணவருக்கும் அந்த நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட அழுதுகொண்டே தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார். அதில், இதுதான் முதல்வர் யோகி ஆதித்தநாத் பேசும் நீதியா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

    ×