என் மலர்
நீங்கள் தேடியது "வங்கதேசம் வன்முறை"
- இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.
- கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.
- ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
- முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
டாக்கா:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வங்கதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பிச்சென்ற பின் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் அடித்துக் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்கா- அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான மேரி மில்பென் இந்து துறவி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேரி பில்பென் கூறுகையில், சின்மோய் கிருஷ்ண தாஸின் சிறைவாசம் மற்றும் வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் உலகத் தலைவர்களால் இப்போது கவனிக்கப்பட வேண்டும். மத சுதந்திரத்தையும், உலகளவில் உள்ள அனைத்து விசுவாசிகளின் பாதுகாப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
- கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது
1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி, 25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.
இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது.