என் மலர்
நீங்கள் தேடியது "கொல்கத்தா ஐகோர்ட்"
- பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
- கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.
அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவன் மிகவும் அமைதியாக காணப்பட்டான். என்னை தூக்கில் போடுங்கள் என்று அவன் மீண்டும் மீண்டும் சொல்லிய படி இருக்கிறான். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவனது செல்போன் மற்றும் புளுடூத் கண்டெடுக்கப்பட்டது.
கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மேற்குவங்காள வழக்கறிஞர்கள் கூறுகையில், பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டின் தீர்ப்பு திருப்தி அளிப்பதாக உள்ளது எனக்கூறியதுடன், நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவது பாதிக்கபட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என தெரிவித்தனர்.