என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் சித்திக்"
- ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
- செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிஷன் தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்பித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தகவல் ஆணையத்தின் தலையிட்டால், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது. மலையாள திரைப்பட உலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை வெளியானது முதல் மலையாள சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலரும் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானது குறித்து தற்போது புகார்களை தெரிவித்து வருகின்றனர். கேரள திரைப்பட அகாடமி தலைவரும், நடிகரும் பிரபல டைரக்டருமான ரஞ்சித் மீது, மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பாலேரி மாணிக்கம் படத்தில் நடிக்க என்னை ரஞ்சித் அழைத்தார். அப்போது ஓட்டல் அறையில் வைத்து, அவர் எனக்க பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தார். எனது வளையல்களை தொடுவது போல் கைகளை தடவினார். தலைமுடியையும் கோரி விட்டார். அவரது தவறான நோக்கத்தை புரிந்து கொண்ட நான் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டேன். பின்னர் அந்தப் படத்தில் நடிக்கவே இல்லை என்றார்.
எனது குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் கோர்ட்டு வழக்கு என கேரளாவுக்கும் மேற்கு வங்காளத்துக்கும் என்னால் அலைய முடியாது. யாராவது எனக்கு உதவினால் புகார் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் புகார்களை தொடர்ந்து ரஞ்சித்துக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்டவருமான ஆனிராஜா, புகாரில் சிக்கிய டைரக்டர் ரஞ்சித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எதிராக பேரணி நடத்தப் போவதாக இந்திய வாலிபர் சங்கம் அறிவித்தது.
இந்த சூழலில் நேற்று வயநாட்டில் இருந்து கோழிக்கோடு வந்த ரஞ்சித், தனது காரில் மாட்டியிருந்த அகாடமி சேர்மன் என்ற பெயர்பலகையை அகற்றி விட்டு தான் வந்தார். எனவே அவர் விரைவில் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் மலையாள திரைப்படகலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.
சித்திக்கிடம் இருந்து தனது நண்பர்கள் பலரும் இது போன்ற கொடுமையை அனுபவித்துள்ளது பின்னர் தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அம்மா அமைப்பின் தலைவர் மோகன்லாலுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், என் மீதான குற்றச்சாட்டு களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், என் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் பதில் அளிப்பேன் என்றார்.
இதற்கிடையில் நடிகை ஜூபிதா, மோகன்லாலின் திரிஷ்யம் படத்தில் நடித்த ஹன்சிபாஹசன் ஆகியோ ரும் வேறு சிலர் மீது பாலி யல் புகார்களை தெரிவித்து உள்ளனர்.
- நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
- பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.
அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.
முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
படப்படிப்பு தளம் மற்றும் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கியிருந்தபோது பல நடிகைகள் சந்தித்த பாலியல் பிரச்சினைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் பல நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.
இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.
அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று நடிகர் சித்திக்கும் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நடிகை ஒருவரின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார், அவர் மீது கற்பழிப்பு (376), கொலைமிரட்டல் (506) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
நடிகர் சித்திக் மீது நடிகை கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் குறிப்பிட்ட அறையில் நடிகர் சித்திக் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தி ருக்கிறது.
மேலும் நடிகையின் நண்பர் அளித்துள்ள வாக்கு மூலம், சம்பவத்திற்கு பிறகு நடிகை மனநல மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்றது உள்ளிட்ட சம்பவங்கள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் நடிகர் சித்திக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது.
- கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.
- சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதில் பாலியல் தொந்தரவு உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியான பிறகு பல்வேறு நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் புகார் கூறி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், எடவேளை பாபு உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டன.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.
இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், புகார்களின் அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து பலரும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர். இதில் நடிகர் சித்திக் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் விசாரணைக்கு முன்பு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அவர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளார்.
இதனை அவர் மின்னஞ்சல் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிவித்து உள்ளார். நாளை (திங்கட் கிழமை) சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
- சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பாலியர் புகார் அளிக்க வழக்குப்புதிவு செய்யப்பட்டர்.
- உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்.
மலையாள திரை உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணையும் இதனை உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகைகள் புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் முக்கியமானவர் நடிகர் சித்திக். மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவரை பாலியல் புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து தலைமறைவான அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.
அதன்பிறகு சித்திக், சிறப்பு புலனாய்வு குழு முன்பு கடந்த மாதம் 7 மற்றும் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் மனு காலம் முடிந்ததால், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் முன்னிலையில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
- நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சித்திக். இவர் பாலியல் பலாத்தகாரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் நடிகர் சித்திக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கிற்கு தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் சித்திக் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது. ஆனால் அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.