என் மலர்
நீங்கள் தேடியது "ஹேமா கமிட்டி"
- குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. அதன டிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.
அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் நடிகரும், இயக்குனருமான பாலச்சந்திர மேனனின் மீது பாலியல் புகார் அளித்தநடிகை மீது கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி நடிகை அவதூறாக பேசியதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் பாலச்சந்திர மேனன் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நடிகையின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நடிகை பாலச்சந்திரமேனன், நடிகர்கள் ஜெயசூர்யா, இடைவேளை பாபு உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர்.
- பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஹேமா கமிட்டி அறிக்கையால் அம்பலமானது. இதையடுத்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மேலும் ஒரு இயக்குனர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் மலையாள திரைப்பட இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகியோரின் மீது மரடு போலீஸ் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னை விஜித் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு இயக்குனர் சுரேஷ் திருவல்லா வற்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மற்றும் அவரது நண்பர் விஜித் விஜயகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளனர். மலையாள திரையுலகில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், ஏற்கனவே பல வழக்குகளை விசாரித்து வருகின்றனர். அவர்களே இந்த வழக்கையும் விசாரிக்க உள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இயக்குனர் சுரேஷ் திருவல்லா மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவர் மலையாளத்தில் சில படங்களை இயக்கியிருப்பது மட்டுமின்றி, சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பாலியர் புகார் அளிக்க வழக்குப்புதிவு செய்யப்பட்டர்.
- உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்.
மலையாள திரை உலகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில நடிகர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணையும் இதனை உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடிகைகள் புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் முக்கியமானவர் நடிகர் சித்திக். மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்பட பல்வேறு மொழி படங்களில் நடித்த இவரை பாலியல் புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து தலைமறைவான அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கியது.
அதன்பிறகு சித்திக், சிறப்பு புலனாய்வு குழு முன்பு கடந்த மாதம் 7 மற்றும் 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் மனு காலம் முடிந்ததால், உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திரசர்மா ஆகியோர் முன்னிலையில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.
- நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தகவல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. இது மலையாளம் மட்டுமின்றி அனைத்து மொழி திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதையடுத்து நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழு விசாரணை நடத்தி மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது வழக்கு பதிந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மலையாள திரையுலக பாலியல் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் மலையாள சீரியல் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். படப்பிடிப்பின் போது சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருக்கிறார்.
அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அது குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு இன்போ பார்க் போலீசாருக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் சீரியல் நடிகர்களான பிஜூ சோபானம், ஸ்ரீகுமார் ஆகிய இருவரின் மீது போலீசார் பாலியல் வழக்கு பதிந்தனர்.
நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்துள்ள அந்த நடிகை, தான் நடித்து வந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.