என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலெஸ்டர் குக்"

    • முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார்.

    லண்டன்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அப்போது இங்கிலாந்து 67 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.

    இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

    • காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும்.
    • 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15921 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சின் உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆனால் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் அந்த சாதனையை உடைப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை 146 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12500 ரன்களை கடந்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த 4 வருடங்களில் 3000 - 4000 ரன்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை முந்தி எளிதாக அவர் உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதமடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் வாழ்நாள் சாதனையை உடைத்து ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில் அட்டகாசமாக விளையாடி வரும் ரூட்டை காயம் மட்டுமே தடுக்க முடியும் என்றும் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முந்துவதை என்னால் பார்க்க முடியும். நான் ஓய்வு பெற்ற போது என் சாதனையை அவர் உடைக்க அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கருதினேன். கேப்டன்ஷிப் மட்டுமே அவருடைய ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அப்போது பென் ஸ்டோக்ஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டது ரூட்டுக்கு பெரிய உதவியை செய்தது. இப்போதும் அந்த சாதனையை உடைக்க முடியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அதற்கு வாய்ப்புள்ளது. அனைத்து மகத்தான வீரர்களும் காயங்களை கடந்து நீண்ட காலம் விளையாடுவதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல ரூட் கேரியரில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது.

    ஆனால் அது போன்ற காயங்கள் மட்டுமே அவரை சாதனையை உடைப்பதிலிருந்து நிறுத்த முடியும். இருப்பினும் இப்போதும் பசியுடன் விளையாடும் அவர் இன்னும் சில வருடங்கள் இப்படியே விளையாடுவதை நான் பார்ப்பேன். 2025 ஆஷஸ் தொடர் மட்டுமே ரூட்டுக்கு சவாலாக இருக்கும். தற்போதைய நிலையில் அந்த சாதனைக்கு சொந்தக்காரராக சச்சின் 51%, ரூட் 49% இருப்பார்கள் என்று சொல்வேன். ஆனாலும் ரூட் அதை உடைப்பார் என்று நான் பந்தையம் கட்டுவேன்.

    இவ்வாறு குக் கூறினார்.

    • பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை.
    • நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 1 - 0* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ந் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபின் வியப்பான பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வால் 161 ரன்களை சிறப்பாக குவித்தார். ஆனால் தற்சமயத்தில் உலகின் சிறந்த வீரராக செயல்படும் ஜஸ்ப்ரித் பும்ராவின் செயல்பாடுகளை தான் நான் விரும்பி பார்த்தேன். தற்போது யாரும் அவரை போல் இல்லை. உண்மையில் அவரை பார்க்கும் போது நகைச்சுவையானர் போல தெரிகிறது. ஏனெனில் நீங்கள் பார்க்கும் போது அவர் அந்தளவுக்கு அசத்தலாக செயல்படுகிறார். நல்ல வேளையாக அவரது பந்து வீச்சை நான் எதிர்கொள்ளவில்லை. என்று கூறினார்.

    இந்தியாவின் வெற்றி குறித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியதாவது:-

    பெர்த் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை இப்படி சுத்தியால் அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் பெர்த் பொதுவாக விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடமாகும். இம்முறை அப்போட்டி வாகா மைதானத்தில் நடைபெறவில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் ஆப்டஸ் மைதானத்தைப் பற்றியும் எனக்கு தெரியும்.

    வரலாற்றில் அங்கே ஆஸ்திரேலியா இப்படி நிறைய தோல்விகளை சந்திக்க மாட்டார்கள். அதையும் தாண்டி வென்ற இந்திய மிகவும் தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனக் கூறினார். 

    ×