என் மலர்
நீங்கள் தேடியது "பிரீத்தி பால்"
- இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவின் பிரீத்தி பால் வெண்கலம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் பிரீத்தி பால் 30.01 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலம் வென்றார்.
பிரீத்தி பால் தனது இரண்டாவது வெண்கலத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தினார்.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக அளவில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது
இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரீத்தி பால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 3 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஓட்டப் பந்தயத்தில் சீனா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றது.
ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.