என் மலர்
நீங்கள் தேடியது "UK இங்கிலாந்து"
- இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது நுழைய தடை.
- இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் தடை.
இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண் எம்.பி.க்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.
இதுதொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம் கூறும்போது, இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோர் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.

எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி கூறும்போது, இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இதுபோன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.
இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. 2 எம்.பி.க்களை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு திரும்புவதையும், ரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் இங்கிலாந்து அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.
- அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
- 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
லண்டன்:
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஹாரி கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க நடிகை மேகன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனால் அரச குடும்பத்தினருக்கும், ஹாரி-மேகன் தம்பதிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து 2022-ல் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். பின்னர் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது அரச குடும்பத்துடனான உறவை மீட்டெடுக்க ஹாரி முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் தனது முன்னாள் ஆலோசகர்களின் உதவியை நாடி உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் அரச குடும்பத்தில் முழுமையாக திரும்புவதை அவர் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.