search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சய் ராய்"

    • சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .

    கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் சிபிஐ பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறது. சிசிடிவி காட்சிகளில் அடிப்படையிலும், சஞ்சய் ராயின் ப்ளூ டூத் ஹெட் செட் ஆனது சம்பவம் நடத்த மருத்துவமனையின் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையிலும் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் சஞ்சய் ராய் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவனது வக்கீல் கவிதா சர்க்கார் சில விவரங்களைத் ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையான பாலிகிராப் டெஸ்ட் நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , நீங்கள் கேட்கும் கேள்வியை தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று சஞ்சய் ராய் தெரிவித்தார். மேலும் உண்மை கண்டறியும் சோதனையில், தான் செமினார் ஹாலுக்குள் செல்லும்போதே அந்த பெண் சுயநினைவின்றி கிடந்ததாகக் கூறியதும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

    அந்த பாலிகிராப் டெஸ்ட் அறிக்கைப்படி, சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9 அன்று இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும்போது மயக்க நிலையிலிருந்த பெண் மீது முழுவதுமாக ரத்தம் படிந்திருந்தது .எனவே பயத்தில் நான் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று சஞ்சய் ராய் தெரிவித்தார் என்று கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.

    ஏன் முதலிலேயே தான் நிரபராதி என்று கல்கத்தா போலீஸ் கைது செய்தபோது சஞ்சய் ராய் சொல்லவில்லை என்று கேள்விக்கு பதிலளித்த கவிதா சர்க்கார், அப்போது சஞ்சய் ராய் பயத்திலிருந்ததாகவும், தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராய் எளிதாக செமினார் ஹாலுக்குள் நுழைய முடிந்தது என்றால் அவருக்கு முன்பாகவே அந்த இடத்திலிருந்த பாதுகாப்பு குறைபாட்டை யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்று அர்த்தம். எனவே உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்துள்ளான் என்று கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார். 

    ×