என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துலிப் கோப்பை"
- இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.
- மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார்.
- 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தார்.
துலீப் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது.
அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய இந்தியா சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது.
2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா டி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இப்போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ருதுராஜின் காலில் விழுந்து வணங்கினார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
A Fan Entered into Stadium & Touched Captain Ruturaj's Feet ???Captain Ruturaj Gaikwad Era Start ??#DuleepTrophy2024 #Jadeja #RuturajGaikwad pic.twitter.com/yYX4TiZn7Y
— ????? ➌➊ ? (@PradeepNis992) September 6, 2024
இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.டோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்ததை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
In a touching moment, a fan touched MS Dhoni's feet on the pitch.Not only for cricket ? #DHONI? #Dhoni #MSDhoni #CSKvsGT #GTvsCSK #GTvCSK pic.twitter.com/ZYWFNWuXJg
— Donrithik (@donrithik) May 19, 2024
- இரண்டாம் நாள் முடிவில் இந்தியா டி அணி 206 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஷ்ரேயஸ் அய்யர், தேவ்தத் படிக்கல் அரை சதமடித்தனர்.
புதுடெல்லி:
துலீப் கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணியும் மோதியது. டாஸ் வென்ற சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா டி அணி 48.3 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் படேல் அரை சதம் கடந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சி அணி சார்பில் வைஷாக் 3 விக்கெட்டும், அனுஷ் காம்போஜ், ஹிமான்ஷு சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி அணி 62.2 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் அரை சதம் அடித்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் 34 ரன்னில் அவுட் ஆனார்.
இந்தியா டி சார்பில் ஹர்சித் ரானா 4 விக்கெட்டும், அக்சர் படேல், சரண் ஜெயின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறினர்.
3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷ்ரேயாஸ் அய்யர்-தேவ்தத் படிக்கல் ஜோடி 53 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் 54 ரன்னில் அவுட்டானார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல்-ரிக்கி புய் ஜோடி 73 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 49 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா சி அணியை விட 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டும், விஜய்குமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Playing late, letting the ball come to him, and sticking close to the body - Musheer's technique is a joy to watch! #MusheerKhan #DuleepTrophypic.twitter.com/CD3ud7frFA
— Akshay Tadvi ?? (@AkshayTadvi28) September 5, 2024
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.
பெங்களூரு:
துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.
செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்