என் மலர்
நீங்கள் தேடியது "Karolína Muchova"
- முதல் செட்டை 1-6 என கரோலினா கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்டுகளை ஜெசிகா வென்று அசத்தினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் செக் குடியரசு வீராங்கனையான கரோலினா முச்சோவாவும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கரோலினா கைப்பற்றினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா அடுத்த இரண்டு செட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெசிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிபோட்டியில் சபலென்கா மற்றும் ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு பெகுலா தகுதி பெற்றுள்ளார்.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சா உடன் மோதினார்.
இதில் முச்சோவா 6-2, 6-0 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, முச்சோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் மோதினார்.
இதில் முச்சோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முச்சோவா, கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
- இதில் ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (4-வது சுற்று) தகுதி பெற்றுள்ளார். இவர் 4-வது சுற்றில் ஸ்விடோலினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இதன் மற்றொரு ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவும் சக நாட்டவரான கேட்டெரினா சினியாகோவாவும் மோதினர். இதில் 7-5, 6-1 என்ற கணக்கில் கரோலினா முச்சோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.