search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான கடத்தல் பீதி"

    • அரசுமுறை பயணமாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
    • அங்கு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    ஜெனீவா:

    அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், ஜெனீவாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

    சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ஐ.சி-814: தி காந்தஹார் ஹைஜாக் என்ற வெப் தொடர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மந்திரி ஜெய்சங்கர் அளித்த பதிலளித்து கூறியதாவது:

    இந்த வெப் தொடரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் என் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    1984-ம் ஆண்டிலும் ஒரு விமான கடத்தல் நடந்தது. இண்டியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தை காலிஸ்தான் ஆதரவு கடத்தல்காரர்கள் துபாய்க்கு கடத்தினர்.

    அப்போது இளம் அதிகாரியாக இருந்த நான் இந்திய வெளியுறவு துறையின் கையாளும் குழுவில் ஒருவனாக இருந்தேன். மொபைல் போனில் என் அம்மாவை அழைத்து, 'விமானத்தை கடத்தியுள்ளனர். என்னால் வீட்டுக்கு வரமுடியாது' என கூறினேன்.

    அதன்பின், கடத்தப்பட்ட விமானத்தில், என் தந்தையும் இருப்பதைக் கண்டுபிடித்தேன். இது ஒரு பெரிய கதை.

    இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒருபுறம் கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தேன். மறுபுறம், விமானக் கடத்தல் தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தேன் என தெரிவித்தார்.

    ×