என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வங்கதேச பயிற்சியாளர்"
- உண்மையிலேயே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ஊக்கமடைகிறோம்.
- இந்த தொடரில் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
சென்னை:
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியையொட்டி வங்காளதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் அது இந்திய தொடரை எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. இதனால் எங்கள் மீது உருவாகியுள்ள எதிர்பார்ப்பு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். ஆனால் நெருக்கடியை கவுரவமாக கருதுகிறோம். இது எங்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும். அதே சமயம் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம். பலம், பலவீனம், எங்களது எல்லை எது என்பதை புரிந்து வைத்துள்ளோம். ஆனால் உண்மையிலேயே உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடுவதன் மூலம் ஊக்கமடைகிறோம். இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது கிரிக்கெட்டில் இப்போது மிகப்பெரிய சவாலாகும். எனவே சிறந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது உங்களது அணி எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். அதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம்.
சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசனும், மெஹிதி ஹசன் மிராசும் பேட்டிங்கிலும் பலம் சேர்க்கக் கூடியவர்கள். சுழற்பந்து வீசுவதுடன் தரமான பேட்ஸ்மேன்களாகவும் உள்ளனர். சதமும் அடித்திருக்கிறார்கள். இரு விக்கெட் கீப்பர்கள் லிட்டான் தாஸ், முஸ்தாபிஜூர் ரகுமான் எங்களது பிரதான பேட்டர்களாக உள்ளனர். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். இந்த தொடருக்கு எங்களது அணியின் கலவை மிகவும் நன்றாக இருக்கிறது. இது, இந்த தொடரில் எங்களால் கடும் சவால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
ஆடுகளத்தை பார்ப்பதற்கு நல்ல போட்டிதரக்கூடிய ஒன்றாக இருக்கும் போல் தெரிகிறது. ஆனால் இந்திய துணை கண்டத்தில் ஆடுகளத்தை கணிப்பது எளிதல்ல. முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்புமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்