search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2025 ஏலம்"

    • ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது .
    • முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    இந்திய கிரிக்கெட்டுக்கே உரிய தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 2024 ஐபிஎல் போட்டியில் கவுதம் கம்பீர் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன

    ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

    இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட 1574 வீரர்களின் எண்ணிக்கை தற்போது 574 ஆக குறைக்கப்பட்டு இறுதி கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.

    இறுதி கட்ட பட்டியல் விவரம், 

    கேப்டு இந்திய வீரர்கள் - 48

    கேப்டு வெளிநாட்டு வீரர்கள் - 193

    இணை நாட்டு வீரர்கள் - 3

    அன்கேப்டு இந்திய வீரர்கள் -318

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளது.
    • ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது.

    10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை அனைத்து அணிகளும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை ரீடெய்ன் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி என 5 வீரர்களை அந்த அணி ரீடெய்ன் செய்துள்ளது. ஒரு ரிடம் கார்டுடன் ஏலத்திற்கு அந்த அணி செல்ல உள்ளது.

    ரீடெய்ன் செய்த 5 வீரர்களுக்காக சன்ரைசர்ஸ் அணி ரூ.75 கோடி செலவு செய்துள்ளது. அதில் கிளாசென் ரூ.23 கோடி, பாட் கம்மின்ஸ் 18 கோடி, அபிஷேக் சர்மா ரூ.14 கோடி, டிராவிஸ் ஹெட் ரூ. 14 கோடி, நிதிஷ் ரெட்டி ரூ. 6 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி வசம் ரூ.45 கோடி ரூபாய் மட்டுமே இருக்கும். வெறும் 45 கோடியில் 18-20 வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

    • நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
    • ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.

    மும்பை :

    ஐபிஎல் 2025-ம் ஆண்டிற்கான மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 24 மற்றும் 25-ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். கடந்த ஐபிஎல் மெகா ஏலம் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது.

    ஐபிஎல் மெகா ஏலத்தை சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவுக்கு சென்று எந்த இடத்தில் நடத்துவது, சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

    நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதி மெகா ஏலம் நடத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஆஸ்திரேலிய இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் ஒளிபரப்பு செய்யப்படும்.

    அதே வேலையில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தினால் ஆஸ்திரேலிய போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள். இதனால் தேதியை மாற்ற டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 அல்லது ஒரு மணிக்கு முடிந்துவிடும்.

    இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்பதை வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தான முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க இருக்கிறது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

    ஆர்டிஎம் கார்டுகளை எத்தனை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இதில் பங்கு பெற்ற அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினர். எனினும் பெரும்பாலான அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மூன்று வீரர்களை ஆர்.டி எம் கார்டு வைத்து மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் இதற்கு சில அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது.

    இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் முன்னணி வீரர்கள் வெறும் ஐந்து வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என்ற எண்ணிக்கையையும் பிசிசிஐ இறுதிச் செய்ய உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த ஐந்து வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்களுமே உள்ளூர் வீரராக இருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் ஐந்து வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். ஆர்டிஎம் வசதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியானால் அது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு அது பெரிய இடியாக வந்து விழும்.

    பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
    • சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் 18-க்கான ஏலம் நவம்பரில் 3-வது அல்லது 4-வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஏலம் துபாயில் நடந்ததை போலவே, இந்த முறையும் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வளைகுடா நகரமான தோஹா அல்லது அபுதாபியில் நடத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

    மேலும் சமீப காலமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் அதிக முதலீடுகளை செய்து வரும் சவுதி அரேபியாவும் ஏலத்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடம் குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.

    தக்கவைப்பு விதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படலாம். அதாவது ஏலத்திற்கான திட்டத்தைச் செய்ய அணிகளுக்கு இரண்டு மாதங்கள் இருக்கும். அணிகள் தங்கள் தக்கவைப்பை அறிவிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 15-க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×