என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷாங்காய் ஓபன் டென்னிஸ்"
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் இத்தாலி வீரரான ஜன்னிக் சின்னரும் மோதினர்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரரான ஜன்னிக் சின்னர் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சின்னர் 7-6 (7/4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சின்னர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலி வீரர் சின்னருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் நம்பர் 3 வீரரான ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-7 (5-7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-4, 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜான் ஷெல்டனை 6-4, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, குரோசியாவின் நிகோலோ மெடிக்-நெதர்லாந்தின் வெஸ்லி ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-7 (5-7) என போராடி தோற்றது. இதில் சுதாரித்துக் கொண்ட போபண்ணா ஜோடி 2வது செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் போபண்ணா ஜோடி 12-14 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என இழந்த சின்னர், அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் வு யீபிங்குடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-5), 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரேசில் வீரர் தியாகோ செய்போத் உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 7-5, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார். இதில் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அபார வெற்றி பெற்றது.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக், ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்-பேப்லோ கரீனோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி சிறப்பாக ஆடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ராமநாதன் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.
இதில் ராமநாதன் 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.