என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை கிரிக்கெட் அணி"

    • இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு.
    • பிரதமருடன் அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.

    பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    பின்னர், வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.

    அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தான் மேற்கொண்டு வரும் பயணம், சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில், பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது, அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர், " 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை எண்ணி பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்!" என்றார்.

    • இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா பணியாற்றி வந்தார்.
    • அவர் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு பிறகில் இருந்து தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூர்யா செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில் அவரேயே முழு நேர தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராக இருந்த போது இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

     

    இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 10 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    இலங்கை அணி அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ×