என் மலர்
நீங்கள் தேடியது "தாஜ் மஹால்"
- நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார்.
- இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு மாலத்தீவு அதிபர் வருகை புரிந்தார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவி சஜிதா முகமதுவுடன் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
நேற்று பிரதமர் மோடியை மாலத்தீவு அதிபர் சந்தித்து பேசினார். அதில், நாணய பரிமாற்ற ஒப்பந்தம், மாலத்தீவில் ரூபே கார்டு அறிமுகம் மற்றும் ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை திறப்பு உட்பட பல ஆவணங்களில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இன்று உத்தரபிரதேச மாநிலத்திற்கு வருகை புரிந்த மாலத்தீவு அதிபரை ஆக்ரா விமான நிலையத்தில் அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார்.
பின்னர் மாலத்தீவு அதிபர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மஹாலை சுற்றி பார்த்து புகைப்படங்கள் எடுத்தார்.
மாலத்தீவு அதிபரின் வருகை காரணமாக காலை 8 மணி முதல் 10 மணி வரை தாஜ் மஹாலை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வெடிகுண்டு மிரட்டல்களால் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
- சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்.
இந்தியாவில் சமீப காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்களால் வீண் பதற்றம் மற்றும் நேர விரயம், தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படுகிறது.
இந்த வரிசையில், தற்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹால் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தாஜ் மஹால் அழகை பார்த்து ரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தாஜ் மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து தாஜ் மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி தான் என்று தெரியவந்தது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.