என் மலர்
நீங்கள் தேடியது "முரசொலி செல்வம்"
- முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம்.
- முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் (82) வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி செல்வம் மாரடைப்பு காரணமாக பெங்கரூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் காலமானார்.
முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். முரசொலி செல்வம் முரசொலி மாறனின் சகோதரருமாவார். முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் கட்சித்தொண்டர்களின் அஞ்சலிக்காக முரசொலி செல்வத்தின் உடல் வைக்கப்பட உள்ளது.
- கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
- என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.
82 வயதான அவர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.
கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.
என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.
செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று தெரிவித்துள்ளார்.
- முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
- கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவர் முரசொலி செல்வம்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும்-இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வம் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
- முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில்,
- முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
- கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்.
- முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் உடலுக்கு அழுதுகொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் செலுத்தும் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கொள்கை முரசொலிக்கும் உங்கள் எழுத்துகளை நிறுத்திக் கொண்டீர்களே!" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
- கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்
- முரசொலி செல்வம் உடலுக்கு ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
இந்நிலையில், முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
- கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்.
- முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இரங்கல் செய்தியில் "முரசொலி பத்திரிகையில், சுமார் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணியாற்றி தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரவாக ஒலித்தவர் முரசொலி செல்வம். அவர்கள் முரசொலி நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்துக்கொண்டே திரைத்துறையில் இது எங்க நாடு, திருட்டு ராஜாக்கள், மாடி வீட்டு ஏழை, பாலைவன ராஜாக்கள், புயல்பாடும் பாட்டு பாடாத தேனீக்கள், பாசப்பறவைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர்.
மேலும் திரைத்துறையிலும் பத்திரிக்கைத்துறையிலும் சிறப்பான பங்களித்தவர். 84 வயதான முரசொலி செல்வம் அவர்கள், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய மறைவால் இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முரசொலி செல்வம் மாமா மறைவால் ஆற்ற முடியாத துயரில் உறைந்து நிற்கிறேன்.
- செல்வம் மாமா இனி வர மாட்டார் என்று நினைக்கும்போது நெஞ்சம் கலங்குகிறது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.
இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது.
நல்லது, கெட்டது எல்லாத்துலயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம் அவர்கள் தான்." என்று நம்முடைய கழகத்தலைவர் அவர்கள், 'முரசொலி நினைவலைகள் நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், 2019-ஆம் ஆண்டிலிருந்து கழகத்தில் கழக அரசில் நான் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறேன். அதனைக் காண்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தாலும், கலைஞர் அவர்கள் இடத்திலிருந்து அந்தக் கவலையைப் போக்கிடக் கூடியவராக முரசொலி செல்வம் மாமா அவர்கள்தான் இருந்தார்கள்.
எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற 'உங்களின் குரல்' இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம். மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு உதய்" என்று கூறியுள்ளார்.
- முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
- முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் வலைதளத்தில், விஜயகாந்த் உடன் நல்ல நட்புடன் பழகியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைவு தி.மு.க.வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
- முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, முரசொலி செல்வம் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பிறகு, செய்தியளர்களிடம் பேசிய திருமாவளவன், "முதலமைச்சரின் மு.க.ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்ந்தவர் முரசொலி செல்வம். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
முரசொலி செல்வம் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்.
முரசொலி செல்வம் உடலுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார்.
முரசொலி செல்வம் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், "கலைஞரின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிரதிபலிப்பவராக இருந்தார் முரசொலி செல்வம்" என்றார்.
முரசொலி செல்வம் உடலுக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " "திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தொண்டர்களுக்கும் இது பேரிழப்பு" என்றார்.
முரசொலி செல்வம் உடலுக்கு நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், " நான் பொன்னர் சங்கர் படம் எடுத்தபோது 5 வருடங்களாக கலைஞரோடு இருந்தேன். அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அந்த நாட்களை மறக்கவே முடியாது" என்றார்.
முரசொலி செல்வத்தின் உடலுக்கு நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் அஞ்சலி செலுத்தினர். பிறகு பேசிய விஜயகுமார், " தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்து கடைசி வரை பணியாற்றியவர் முரசொலி செல்வம்" என்றார்.
மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.
- முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்ககாக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய பிரமுகர்கள் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்த முரொசலி செல்வம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
- முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதாகிருஷ்ணன் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்
- பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோரும் சென்றனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அக்காள் செல்வியின் கணவர் முரசொலி செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
இதையறிந்து மராட்டிய கவர்னரான சி.பி. ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்தில் உள்ள செல்வியின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றார்.
அப்போது அங்கிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை வரவேற்றார். அங்கு முரசொலி செல்வம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சி.பி. ராதா கிருஷ்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், செல்விக்கும் ஆறுதல் கூறினார்.
அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சக்கர வர்த்தி ஆகியோரும் சென்றனர்.