search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திக ஹத்துருசிங்க"

    • கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக 2-வது முறையாக பதவியேற்றார்.
    • இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வங்கதேசம் முழுவதுமாக இழந்தது.

    வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடரையும் வங்கதேசம் முழுவதுமாக இழந்தது.

    இந்நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக 2-வது முறையாக பதவியேற்றார். அவர் தலைமையிலான வங்கதேசம் கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டது.

    இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது பாகிஸ்தானில் அவர்கள் பெற்ற முதல் வெற்றி மற்றும் 15 ஆண்டுகளில் முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.

    இவருக்கு பதிலாக முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான பில் சிம்மன்ஸ் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை பொறுப்பில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இவர் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் பயிற்சியாளராக இருந்தவர், 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ×