search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"

    • 5 பேரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
    • 2 வருடமாக சிஎஸ்கே அணிக்காக கான்வே விளையாடி உள்ளார்.

    ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர் கான்வே விடுவிக்கப்பட்டார். 2 வருடம் ஆதரவளித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த விசுவாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கான்வே ஏலத்தில் வரும் பட்சத்தில் இவரை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டேவான் கான்வே காயம் காரணமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.எஸ். டோனியை 4 கோடி ரூபாய்க்கு Uncapped வீரராக தக்கவைத்து கொள்ள வாய்ப்பு.
    • ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்டை உறுதியாக தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்ப்பு.

    ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து அணிகளும் வீரர்களை விடுவிக்க வேண்டும். ஆறு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதில் ஐந்து பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிவர்களாக இருக்கலாம். ஒரு சர்வதேச போட்டிகளில் விளையாடாத Uncapped வீரராக இருக்க வேண்டும்.

    நாளைக்குள் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்து கொண்டே வந்தது. தான் இன்னும் சில காலம் விளையாட விரும்புகிறேன் என டோனி சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சில் ஒன்றில் பேசும்போது தெரிவித்திருந்தார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் Uncapped வீரராக தக்க வைக்க சி.எஸ்.கே. ஏற்பாடு செய்துள்ளது.

    அதேவேளையில் மற்ற ஐந்து பேர் யார் யாரெல்லாம் என்ற கேள்வி எழுந்து வருகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைத்து கொள்ளும். அவரை நீண்ட நாள் அடிப்படையில்தான் கடந்த வருடம் கேப்டனாக நியமித்தது.

    யார்க்கரில் அசத்தும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரனாவை தக்கவைத்துக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஜடேஜாவையும் தக்கவைத்துக் கொள்ளும். இதனால் டோனியுடன் நான்கு பேர் உறுதியாகிவிட்டது.

    இன்னும் இரண்டு இடங்களுக்கு ஷிவம் துபே, கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஆகியோரில் இருவரை தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் யார் தெரியுமா? என ரசிகர்களுக்கு சவால் விடும் வகையில் புதிர் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எமோஜி மூலம் வெளியிட்டுள்ளது.

    இதற்கு இவர்களாக இருக்கலாம்... அவர்களாக இருக்கலாம்... என ரசிகர்கள் பதில் அளித்து வருகிறார். பெரும்பாலானோர் ருதுராஜ், ஜடேஜா, ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, டோனி, பதிரனா என கருத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதி முறைகள் அறிவிக்கப்பட்டது.
    • ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். மெகா ஏலத்துக்காக ஒரு அணி ரூ.120 கோடி செலவு செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதி முறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.மெகா ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.டோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க் வாட், ஜடேஜா, ரவீந்திரா, பதிரானா ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:-

    ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் விளையாடும் பட்சத்தில், அவரை முதல் வீரராக சி.எஸ்.கே. தக்கவைக்கும். அவருக்கு அடுத்தபடியாக ஜடேஜா மற்றும் ரவீந்திரா தக்க வைக்கப்படுவார்கள்.


    கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தக்க வைக்கப்படுவார். பதிரானா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரும் சி.எஸ்.கே. அணி நிர்வாகத்தால் அணியில் தக்கவைக்கப்படுவார்.

    அதனால் எனது பார்வையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி, ஜடேஜா, ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் பதிரானா ஆகிய 5 பேரும் தக்க வைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

    ×