search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்கள் வளர்ப்பு"

    • சப்-கலெக்டர் நாராயணசர்மா திட்டத்தை தொடக்கி வைத்தார்.
    • நீர்நிலைகளில் மீன் குஞ்சிகள் இருப்பு வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் நாட்டு இன மீன் வகைகளான ரோகு, கட்லா, மிர்கால் ஆகியவற்றின் குஞ்சுகளை விட்டு, நாட்டு இன மீன்கள் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

    மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் மீன்வளத்துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    இதன்படி வட்டார வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்படுகிறது., செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவு நீர்நிலைகளில் மீன் குஞ்சிகள் இருப்பு வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது


    அதன்படி மீன்வளத்துறை, மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், 4லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க தயாராகி வருகிறது.

    அதற்காக ஆத்தூர் மீன்வள பண்ணையில் இருந்து கட்லா, ரோகு, மிர்கால் வகை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது., முதல்கட்டமாக மீன் குஞ்சிகளை செங்கல்படாடு மாவட்ட சப்-கலெக்டர் நாராயணசர்மா திருக்கழுக்குன்றம் அடுத்த அகஸ்தீஸ்வரமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தில் 26 ஆயிரம் குஞ்சுகளை விட்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.


    மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், ஒன்றியக் குழு தலைவர் ஆர்.டி.அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இவ்வகை மீன்கள் 7 மாதங்களில் வளர்ந்ததும் அதை பொது ஏலம் விட்டு பிடித்து விற்க்கும் போது கட்லா வகை கிலோ ரூ.220-க்கும், ரோகு வகை ரூ.190-க்கும், மிர்கால் 180-க்கும் விலை போகும் என கூறப்படுகிறது.

    ×