என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை வழக்கு"

    • கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • கர்சன் செல்வத்திடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

    இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமினில் உள்ளனர்.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.

    இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக கோத்தகிரியை சேர்ந்த கர்சன் செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் அவருக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

    அதன்படி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கர்சன் செல்வம் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முக்கிய குற்றவாளியான சயானுக்கும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    • கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர் கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

    கோவிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக இவருக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்று இருப்பதால் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.

    இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு 196 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 தடயங்கள், சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பின் இறுதி கட்ட வாதத்திற்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஓ.ராஜா உள்பட 6 பேரும் காலையிலேயே கோர்ட்டில் ஆஜராகினர். பழங்குடியின மற்றும் பட்டியலின சிறப்பு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சாட்சிகள் அளித்த தகவல்கள் ஒருமனதாக இல்லை என்றும், தற்கொலைக்கு தூண்டியதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    இந்த வழக்கில் தற்கொலை செய்து கொண்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் மனுதாரராக இருந்த நிலையில் அரசு தரப்பு வக்கீலாக பாப்பு மோகன் வாதாடினார். தீர்ப்புக்கு பின்பு அவர் தெரிவிக்கையில்,

    இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து நாகமுத்துவின் இறப்பிற்கு நீதி கிடைக்க போராடுவோம் என்றார்.

    தீர்ப்பு குறித்து ஓ.ராஜா தெரிவிக்கையில்,

    இந்த வழக்கில் என்மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நீதிமன்றம் மூலம் நான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்தாலும் நான் குற்றம் செய்யவில்லை என நிரூபிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

    ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×