என் மலர்
நீங்கள் தேடியது "பயணம் ரத்து"
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.
- அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.
நாளை நடக்கும் மாநில அரசு விழாவில், நடன கலைஞர் சோனல் மான்சிங்குக்கு விருது வழங்க இருந்தார். கவுகாத்தி பல்கலைக்கழக 32-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருந்தார்.
ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக ஜனாதிபதி தனது அசாம் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இதுதொடர்பாக அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
- புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி குடியரசு தலைவர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார்.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது.
இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்கிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 68,000 பயணிகள் தங்கள் பயணத்தை ஒரே நாளில் ரத்துசெய்துள்ளனர்.
சியோல்:
தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
தலைநகர் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமான விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.