என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஏஎஸ் தேர்வு"

    • அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம்
    • வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கிறார்.

    டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்து 10 ஆண்டுகள் அவரை ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலும் வெற்றிக்கான பணிகளை தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் பிரபல யுபிஎஸ்சி ஆசிரியர் அவத் ஓஜா டெல்லியில் கட்சோ ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைத்துள்ளார். அரசியலில் சேர்ந்து கல்விக்காக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்காக கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு ஓஜா நன்றி தெரிவித்தார்.

    கல்வி என்பது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தின் ஆன்மாவாக இருக்கும் ஒரு ஊடகம். இன்று, எனது அரசியல் இன்னிங்ஸின் தொடக்கத்தில், நான் அரசியலுக்கும் கல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்யவீர்கள் என்று கேட்டால், அரசியலில் இணைவதன் மூலம் கல்வியை மேம்படுத்துவதே எனது நோக்கம் என கூறுவேன் என்று தெரிவித்தார்.

    யார் இந்த அவத் ஓஜா ?

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவத் ஓஜா [வயது 40] சிறுவயதிலிருந்தே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் ஆசைப்பட்டார். அதற்காக அவரது தந்தை சொந்த நிலத்தை விற்று மகனை டெல்லியில் படிக்கச் வைத்தார். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி ஓஜா வெற்றி பெற்றார்.

    ஆனால் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வேறு வேலைக்கு போக பிடிக்காமல் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியரானார். டெல்லி முகர்ஜி நகரில் சொந்தமாக பயிற்சி மையத்தை தொடங்கினார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார். 2019  இல் புனேவில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை தொடங்கினார்.

    வரலாறு, அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பாடங்களில் ஓஜாவின் பயிற்சி வீடியோக்கள், புத்தகங்கள் பிரசித்தி பெற்றவை ஆகும். யுபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் பிரபாலாக அறியப்பட்ட ஓஜா தற்போது திடீரென அரசியலில் குதித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
    சென்னை:

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.



    காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
    அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    காட்பாடி:

    வேலூர் வி.ஐ.டி.யில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-


    மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற தமிழக அரசு தீவிர முயற்சி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியின் வளர்ச்சி 14 சதவீதமாக முன்பு இருந்தது. தற்போது 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் அரசு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தாண்டு 1,6,9,11-ம் வகுப்புகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

    அடுத்த வாரம் முதல் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ‘நீட்’ தேர்வுக்கான 40 சதவீத கேள்விகள் புதிய பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 5,200 அரசுப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

    பிளஸ்-2 படித்து கொண்டிருக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு தணிக்கை பிரிவில் சேர பயிற்சி கொடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். அதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை குறித்து தெரிவித்தால் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்றார். #MinisterSengottaiyan
    ஐ.ஏ.எஸ். தேர்வில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எவ்வித சார்பும் இன்றி, அனைத்து பணிகளுக்கும், யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பணியாளர்களாக நியமனம் செய்கிறது.

    ஆனால் தற்பொழுது பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் முறையில் ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ மதிப்பெண்களை, யு.பி.எஸ்.சி.யின் தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து, இறுதி நியமனப்பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் பணியாளர் நியமனம் தேர்வு மற்றும் தர அடிப்படையில் மட்டும் நடைபெறாமல் ஒரு சில பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் தலையீட்டுக்களுடன் நடைபெறுவதற்கு வழிவகுக்கும்.

    கிராமப்புற இளைஞர்கள் மற்றும் எளிமையான பின்புலத்தில் இருந்து தேர்ச்சி பெறுகின்ற இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த மாற்றம் சில உயர் நிலையிலிருப்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகையளிப்பதற்கும் வழிவகுக்கும்.

    ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ எனும் இந்த பயிற்சியில் இந்தி மொழித்தேர்வும் நடைபெறுவதால் இந்தி மொழி பேசாத இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும். ‘‘பவுண்டேசன் கோர்ஸ்’’ என்பது முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியைத் தவிர்த்து மேலும் 3 இடங்களில் நடைபெறும். பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றத்தின் மூலமாக அனைத்து இடங்களிலும் உள்ள தேச்சி பெற்றவர்களை சரிவர மதிப்பீடு செய்ய முடியாது.

    1978-ல் கோத்தாரி கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த இதுபோன்ற மாற்றத்தை அன்றைய ஜனதா கட்சி அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. எனவே மத்திய அரசு நடப்பில் உள்ள யூ.பி.எஸ்.சி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையிலும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீட்டு முறையிலும், எவ்வித மாறுதல்களும் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.எஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். #Nitishkumar #IAS
    பாட்னா: 

    பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் சமீபத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

    இதேபோல், பீகார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர். #Nitishkumar #IAS
    ×