search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துக்கள் ஏலம்"

    • மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு கோர்ட் அனுமதி.

    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குஜராத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது.

    இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆன்டிகுவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோசடி தொடர்பாக மெகுல் சோக்சி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    மேலும் அவருக்கு சொந்தமான ரூ. 2,565 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்தது. இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு பண மோசடி தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக இதுவரை 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்பதற்கு அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


    இதைத்தொடர்ந்து மெகுல் சோக்சியின் ரூ. 2,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது.

    இதில் கிழக்கு மும்பை சாண்டா குரூசில் கெனி டவரில் உள்ள 6 அடுக்கு மாடி குடியிருப்புகள், டெல்லி மஹர்ஷத்ராவில் உள்ள சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மண்டலத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளும் அடங்கும்.

    ×