என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை கரீனா கபூர்"

    • பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.
    • ராஜ் கபூர் குடும்பத்தை சேர்ந்த ரன்பிர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

    இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள் ஒருவர் ராஜ் கபூர். இவரின் குடும்பத்தை சேர்ந்த ரன்பிர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

    ராஜ் கபூர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தார். இந்நிலையில் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.

    இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்ட ராஜ் கபூர் குடும்பத்தினரிடம் அவர் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

    இது தொடர்பான புகைப்படங்களை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந்தேதி நடந்த கொள்ளை முயற்சியில் அவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
    • பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந் தேதி நடந்த கொள்ளை முயற்சியில், அவர் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    இந்நிலையில் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் தங்கள் மகன்களான தைமூர் அலி கான் மற்றும் ஜஹாங்கிர் அலி கானை போட்டோ எடுப்பதை தவிர்க்குமாறு புகைப்படக்காரர்களை (paparazzi) வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும், பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என்றும், வெளியே செல்லும்போதும் (அ) வீட்டிற்கு திரும்பும்போதும் அவர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    ×