என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச தியான தினம்"
- தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும்.
- இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.
தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என சர்வதேச தியான தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார். டிசம்பர் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து உள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சர்வதேச தியான தினம் இன்று (21/12/2024) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் "மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில் டிசம்பர் 21-ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மன நலம், உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது
மனிதர்களின் மனம் அதிசயமானது. ஆனால் துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணர்கிறார்கள். இது ஏனென்றால் மனம் எனும் அதிசய தொழில்நுட்பத்தை சரியாக கையாளும் கருவிகளை மக்களுக்கு கொடுக்கவில்லை.
தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும். நாம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் "மிராக்கிள் ஆப் தி மைண்ட்" என்ற ஆப்-இனை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வர முடியும். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனமெனும் அதிசயத்தை உணர்ந்திட வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆசியும். .
டிசம்பர் 21-ஆம் தேதியை இதற்கு தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் இது குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாள் அல்லது உத்தராயண காலத்தின் துவக்கம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை, இந்திய அரசாங்கம் மற்றும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகிற்கு மாற்றத்திற்கான கருவிகளை எடுத்துச் செல்வதில் பாரதம் மீண்டும் முன்னணியில் இருப்பது அற்புதமானது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்," என்று கூறியுள்ளார்.
தியானம் என்பது இந்த மனதை ஒரு அதிசயம் போல செயல்படும்விதமாக அதனை இயக்குவதற்குக் கற்றுக்கொள்ளும் செயல்முறையாகும். மனநோயின் பெருந்தொற்று உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மன நலம், உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக… https://t.co/cyQ2F1j8Jb
— Sadhguru Tamil (@SadhguruTamil) December 21, 2024
சத்குரு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக யோகா மற்றும் தியானக் கருவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். இதன் மூலம் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சிகள் குறித்து முன்னணி பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவில், ஈஷா யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் மக்களின் மன அழுத்தம் 50% குறைகிறது, தூக்கத்தின் தரம் மேம்பட்டுள்ளது, ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்து உள்ளது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.