என் மலர்
நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தான் தொடர்"
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் அணியில் இருந்து நீக்கம்.
- தற்போது பேட்டிங்கை வலுப்படுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முல்தானில் நடந்த டெஸ்டில் பாபர் அசாம் நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக கம்ரான் கலாம் அணியில் சேர்க்கப்பட்டார். கம்ரான் குலாம் முதல் போட்டியிலேயே சதம் அடித்து பாகிஸ்தான் டெஸ்டனில் தொடர்ந்து இடம் பிடித்தார். இந்த நிலையில் அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (100 இன்னிங்ஸ்) 3997 ரன்கள் அடித்துள்ளார். இதில் 9 சதம், 26 அரைசதங்கள் அடங்கும். சராசரி 43.9 ஆகும்.
ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணி சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 2-1 எனக் கைப்பற்றியது.
குர்ராம் ஷேசாத், முகமது அப்பாஸ் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- கம்ரான் குலாம் அரை சதமடித்து 54 ரன்னில் அவுட் ஆனார்.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 47 ரன்னுடனும், பவுமா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.;
- 2வது டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
கேப் டவுன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. மார்கிரம் 17 ரன்னும், வியான் முல்டர் 5 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிகல்டன் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து சதமடித்தார்.
4வது விக்கெட்டுக்கு இணைந்த ரிகல்டன், பவுமா ஜோடி 235 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 106 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது, ரியான் ரிகல்டன் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ரியான் ரிக்கெல்டன் 259 ரன்கள் குவித்தார்.
- பவுமா மற்றும் கைல் வெர்ரைன் சதம் அடித்தனர்.
தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. ரியான் ரிக்கெல்டன், பவுமா ஆகியோரின் சதத்தால் தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் குவித்தது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், பெடிங்காம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பெடிங்காம் 5 ரன்னில் வெளியேறிய நிலையில் அடுத்து விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் களம் இறங்கினார். இவர் ரிக்கெல்டனுடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிக்கெல்டன் இரட்டை சதம் விளாசி 259 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் விக்கெட் கீப்பர் கைல் வெர்ரைன் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 100 ரன்னிலேயே ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன் 54 பந்தில் 62 ரன்கள் விளாசினார். கேஷப் மகாராஜ் 35 பந்தில் 40 ரன்கள் அடிக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 141.3 ஓவர்களில் 615 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா தலா 3 விக்கெட்டும் மிர் ஹம்சா, குர்ராம் ஷேசாத தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.