என் மலர்
நீங்கள் தேடியது "கல்லி கிரிக்கெட்"
- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 311 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
- இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 311 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சில்லி பாயிண்டில் பீல்டிங் செய்யும் போது, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய கேப்டன் ரோகித் சர்மா திட்டினார்.
ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஷாட்டை ஆடினார். அப்போது சில்லி பாயிண்டில் இருந்த ஜெய்ஸ்வால் குதித்தார். இதனை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ரோகித், ஜெய்ஸ்வாலிடம், "நீ கல்லி கிரிக்கெட் விளையாடுகிறாயா? பேட்டர் ஷாட் ஆடும் வரை உட்கார்ந்து இரு" என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
They seriously need a whole broadcast dedicated to Rohit's stump mic commentary ? Can't miss those gems!#RohitSharma #BGT2024 #AUSvIND #INDvsAUS #SamKonstas #ViratKohli pic.twitter.com/5ZNWCDRJ4L
— Isha Mehra (@IshaMeh53598003) December 26, 2024