search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் நலம் பாதிப்பு"

    • பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.
    • கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

    இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

    • உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

    சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

    ×