என் மலர்
நீங்கள் தேடியது "ரிஷப் பண்ட்"
- பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை தோனி அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
- அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்து தங்களது 2வது வெற்றியை பெற்றது.
முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி விக்கெட் கீப்பிங்கில் தலா 1 கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக பதிரனா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்தில் அப்துல் சமதை அவர் அவுட் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் அப்போட்டியின் முடிவில் அதை எப்படி செய்தீர்கள் என்று ரிஷப் பண்ட் ஆச்சர்யமாக கேட்டார். அதற்கு தோனி. "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன். அது ஒன்று அடிக்கலாம் அல்லது தவறப்படலாம். அது போன்ற மனநிலையில் தான் பந்தை எறிந்தேன்" என்று சொன்னார்.
அதைக் அருகில் இருந்த கேட்ட லக்னோ ஆலோசர் ஜஹீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற வகையில் ஆச்சரியத்துடன் தோனி போல வெறுங்கை யை தூக்கி எறிந்து செய்துப் பார்த்தார். இறுதியில் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடினேன். அப்போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என தோனியிடம் ஜாலியாக கூறினார்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. தற்போது பெரிய அளவு வெப்பம் இல்லை. அதனால் ஆடுகளமும் பெரிய அளவு மாறாது என நினைக்கிறேன். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி அளவு சிறியதாக இருக்கிறது. இதனால் தான் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறோம் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய பண்ட், லக்னோ அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன். எங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். ஒரு கேப்டனாக என் அணி வென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் அதே பிளேயிங் லெவன் வைத்து தான் விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.
அவர் முதலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன் என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் லக்னோ அணி உரிமையாளர் எப்போதுமே தன் அணி கேப்டனுடன் நல்ல உறவில் இருப்பதில்லை. ஏற்கனவே ராகுலுடனான பிரச்சனையை அவர் சந்தித்த நிலையில் தற்போது பண்ட் இடமும் அதே போல் நடந்து கொள்கிறார். இதனால் தான் பண்ட் இவ்வாறு சொல்லிவிட்டாரா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்ததாக ஏற்கனவே ஊர்வசி கூறி சர்ச்சையை கிளப்பினார்.
- பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர் என ரிஷப் பண்ட் கூறினார்.
ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela) ஒரு பிரபல இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான தருணங்களால் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளார். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்உடனான சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் அவரை கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற வைத்தன.
2022-ம் ஆண்டு, ஊர்வசி ஒரு நேர்காணலில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் தன்னை சந்திக்க ஹோட்டலில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும், ஆனால் தான் அவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். இதை அவர் "RP" என்று மறைமுகமாக குறிப்பிட்டதால், பலரும் அதை ரிஷப் பண்ட் உடன் தொடர்புபடுத்தினர்.
இதற்கு பதிலடியாக, ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளத்தில் "பொய்யான செய்திகளை பரப்புவதை சிலர் தொழிலாக வைத்துள்ளனர்" என்று பதிவிட்டு, ஊர்வசியை மறைமுகமாக விமர்சித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்குதான் தன்னுடைய ஆதரவு என ஊர்வர்சி ரவுடேலா தெரிவித்துள்ளார். இது மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளார். அவரை வழபிலுக்கும் விதமாக இதை கூறியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. விக்கெட் எடுத்துவிட்டு Notebook Celebration-க்காக திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்குமுன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இதே விதமான Notebook Celebration-க்காக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "ரிஷப் பண்ட் ரன்களை குவிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு கேப்டனாக அவர் தங்கத்திற்கு நிகரானவர்" என்று புகழாரம் சூட்டினார்.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. என்ன தான் லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு இந்த போட்டி முடிந்தபிறகும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவத்தை வைத்து ரிஷப் பண்டை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைக்கு என்ன பன்ன காத்திருக்கானோ தெரியல என்ற வடிவேலு கமெடி டயலாக்கை வைத்தும் சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூமுக்கு வாங்க என்ற டயலாக்கை வைத்து பண்டை கலாய்த்து வருகின்றனர்.
- பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
- இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 17 ரன்களே எடுத்து உள்ளார்.
லக்னோ:
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையில் ரிஷப்பண்ட் உள்ளார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. கடந்த காலங்களில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.
ஆனால் ரிஷப்பண்டின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ரூ.27 கோடிக்கான மதிப்பில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து அவர் 17 ரன்களே எடுத்து உள்ளார். சராசரி 5.66 ஆகும். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், ஐதராபாத்துக்கு எதிராக 15 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார். நேற்றைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப்பண்டுடன் உரையாற்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. தோல்வி தொடர்பாக அவர் ரிஷப்பண்டை கேள்வி கேட்பது போல் உள்ளது. மேலும் ரிஷப் பண்டை நோக்கி விரலை நீட்டியது கூட காணப்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் சஞ்சீவ் கோயங்கா விமர்சிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனின் போது அவர் கேப்டனாக பணியாற்றிய கே.எல். ராகுல் மீதும் தோல்வி தொடர்பாக கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ராகுல் அந்த அணியில் இருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே நிலைமை ரிஷப்பண்டுக்கு உருவாகிறது.
- லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
- பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவேனோ என்று பதட்டமாக இருந்தது என பண்ட் கூறியிருந்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக, லக்னோ அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய ரிஷப் பண்ட், "எனக்கு ஒரே ஒரு பதற்றமாக இருந்தது, அது பஞ்சாப் அணியிடம் அதிகமான ஏலத்தொகை இருந்தது. ஷ்ரேயாஸ் பஞ்சாப் அணிக்கு சென்றால், நான் லக்னோ அணியால் எடுக்கப்படுவேன் என்று நினைத்தேன். ஆனால் ஏலத்தில் உங்களுக்குத் தெரியாது. அதனால் ஏலத்தை பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் அணியிடம் லக்னோ அணி தோல்வியை தழுவிய பின்னர், ரிஷப் பண்டை கிண்டல் செய்யும் விதமாக "ஏலத்திலேயே பதற்றம் முடிவுக்கு வந்தது" என்று பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 300 ரன்கள் அடிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- அப்படி இருந்தும் ரிஷப் பண்ட் அவர்களிடம் முதலில் பேட்டிங்கை கொடுத்துள்ளது வியப்பு.
ஐபிஎல் 2025 சீசனின் 7-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
பொதுவாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் 300 ரன்கள் அடிக்க வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால் ஐதராபாத் மைதானத்தில் அவர்களுக்கு எதிராக டாஸ் வெல்லும் அணி கட்டாயம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பதுதான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
ஆனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் பண்ட் டாஸ் வென்று ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்துள்ளார். ஏன் ஐதராபாத் அணியிடம் பேட்டிங்கை கொடுத்தேன் என்பது குறித்து ரிஷிப் பண்ட் கூறியதாவது:-
முடிந்தவரை விரைவாக அவர்களை அவுட்டாக்கி, இலக்கை துரத்த முயற்சிக்க விரும்புகிறோம். ஆவேஷ் கான் ஃபிட் ஆகி அணியில் இணைந்துள்ளார். இதனால் ஷாபாஸ் அகமது விளையாடவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை, நாங்கள் அதை சேஸிங் செய்வோம்.
இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
- 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.
2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.
- மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
- 2025 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்தது.
இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக 2 அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியின்போது எம்.எஸ்.தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தின் அலப்பறை கிளப்புறோம் பாடல் பின்னணியில் ஒலிக்கப்பட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- ஆனால் மோஹ்சின் கான், மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
கே.எல். ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ அதிக விலைக்கு ஏலம் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பேட்ஸ்மேன்கள்
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஏய்டன் மார்கிராம், ஆர்யன் ஜுயல், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன்
ஆல்ரவுண்டர்
மிட்செல் மார்ஷ், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் படோனி

பந்து வீச்சாளர்கள்
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோஹ்சின் கான், ரவி பிஷ்னோய்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
மார்கிராம், பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். இதில் பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் சில போட்டிகளில் களம் இறங்கலாம். ஒருவேளை இந்த ஜோடி ஏற்படவில்லை என்றால் மாற்றப்படலாம். மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இதனால் பேட்டிங் மட்டுமே செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் வரிசை
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமாத், மார்கிராம், ஆயுஷ் படோனி என வலுவான மிடில் ஆர்டர் வரிசையை கொண்டுள்ளது. தொடக்கம் சிறப்பாக அமைந்தால் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரன் வாணவேடிக்கையை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

வேகப்பந்து வீச்சு
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பேரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்த நான்கு பேரையும் தவிர்த்து ஷமர் ஜோசப், அர்ஷின் குல்கர்னி (ஆல்-ரவுண்டர்), பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ஆல்-ரவுண்டர்) ஆகியோர் உள்ளனர். தற்போது மோஹ்சின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் லக்னோ அணி செல்லும் என்பது ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பின்னர்தான் தெரியவரும்.

சுழற்பந்து வீச்சாளர்
ரவி பிஷ்னோய், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, ஆயுஷ் படோனி, எம். சித்தார்த், திக்வேஷ் சிங் உள்ளனர். இதனால் ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, எம். சித்தார்த் முன்னிலை வகிப்பார்கள். தேவை என்றால் மார்கிராமை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர்கள் கைக்கொடுக்கப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்லலாம்.
வெளிநாட்டு வீரர்கள்
டேவிட் மில்லர், மார்கிராம், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷமர் ஜோசப் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இவர்களில் டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்தும் தேவைப்பட்டால் மார்ஷ் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன் களம் இறங்கலாம். பிரீட்ஸ்கேவுக்குப் பதிலாக இம்பேக் பிளேயராக ஷமர் ஜோசப் சேர்க்கப்படலாம்.
அவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகப் பலமானதாக உள்ளது.