என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபி வாரியர்ஸ்"

    • யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சினெல்லா ஹென்றி அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.

    இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

    இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025-க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கான மாற்று வீராங்கனையாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சினெல்லா ஹென்றி யுபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சினெல்லா ஹென்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்து 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி இத்தொடரில் இருந்து விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதில் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலியாவுக்காக 5 டி20 சர்வதேச போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கிம், ஆஸ்திரேலியாவுக்காக 59 டி20, 56 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மேலும் டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 55 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 49 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ×