என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "அதிஃப் அஸ்லம்"
- ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி தொடங்குகிறது.
- முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பிரத்யேக பாடல் வெளியாகி உள்ளது. இதனை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. ஜீத்தோ பாஸி கேல் கே என்ற போட்டிக்கான பாடலை பாகிஸ்தான் பாடகர் அதிஃப் அஸ்லம் பாடி அதில் நடித்துள்ளார்.
The wait is over! ?Sing along to the official song of the #ChampionsTrophy, Jeeto Baazi Khel Ke, featuring the master of melody @itsaadee ?? pic.twitter.com/KzwwylN8ki
— ICC (@ICC) February 7, 2025
இவர் பாலிவுட் மற்றும் பாகிஸ்தான் படங்களில் பின்னணி பாடகராக இருந்தவர். பிரபலமான அதிஃப் அஸ்லமுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி கீதத்தை அப்துல்லா சித்திக் தயாரித்துள்ளார். பாடல் வரிகளை அட்னான் தூல் மற்றும் அஸ்பாண்ட்யார் அசாத் எழுதியுள்ளனர்.