search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிபோமா பாதிப்பு"

    • ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
    • எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.

    கொழுப்பு கட்டிகள் 'லிபோமா' என்று அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு கீழ் வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்புள்ள கொழுப்பு கட்டியாகும். இது பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு, தொடை, நெற்றி, தோள் மற்றும் கைகளில் ஏற்படுகிறது.

    உலக அளவில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு லிபோமா பாதிப்புள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களை அதிகம் பாதிக்கிறது.


    லிபோமா ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். இது சிக்கலை ஏற்படுத்தாது என்றாலும் அவை வளரும்போது அருகில் உள்ள ரத்த நாளங்கள், மூட்டு மற்றும் நரம்புகளை ஊடுருவி பாதிப்பை உண்டாக்கலாம்.

    லிபோமா ஏற்பட உடல் பருமன், சர்க்கரை நோய், அதிக ரத்த கொலஸ்ட்ரால் அளவு, கல்லீரல் நோய், மரபணு காரணங்கள், கார்ட்னர் சிண்ட்ரோம், டெர்கம் நோய், மதுப்பழக்கம் போன்றவை முக்கிய காரணமாகும்.

    இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. இதனை மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. லிபோடிசால்வ் என்றும் அழைக்கப்படும் இன்ஜெக்சன் லிபோலிசிஸ், லிபோசக்சன், அறுவை சிகிச்சை ஆகியவை இதற்குள்ள தற்போதைய சிகிச்சை முறைகளாகும்.


    மேலும், பெரிய அளவு அல்லது விரைவாக வளர்ச்சியடையும் லிபோமா, லிபோமாவில் தொற்று ஏற்பட்டு நிறம் சிகப்பாக மாறுதல் அல்லது கடினமாக மாறுதல், வலி ஏற்படுத்துதல் அல்லது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் குறுக்கிடுதல், அழகியல் காரணங்கள், புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படுவது (லிபோசார்கோமா) போன்ற நிலைகளில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

    லிபோமாவை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் (சால்மன், கானாங்கெளுத்தி அல்லது சூரை மீன்), நார்ச்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும். மதுப்பழக்கம் கூடாது.

    ×