search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதில் எறும்பு புகுவது"

    • நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம்.
    • விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம்.

    காதில் எறும்பு, பூச்சு போன்றவை புகுந்து ஏற்படுத்தும் அவதியை நாம் அனைவரும் ஒருமுறையாவது அனுபவித்திருப்போம். காதுக்குள் இதுபோல எறும்பு, பூச்சி புகுவது ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தும். இதுபோன்ற நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.


    காதில் பூச்சி புகுந்துவிட்டால் முதலில் ஒரு இருட்டறைக்குள் சென்று டார்ச் அல்லது மொபைல் லைட்டை காதில் காட்ட வேண்டும். காரணம் என்னவென்றால் பூச்சி இனங்கள் வெளிச்சத்தை கண்டு வெளியே வந்துவிடும்.

    காதுகளில் எறும்பு சென்றுவிட்டால் வீட்டில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் இருந்தால் அதில் சில துளிகளை காதுகளில் விடலாம். இதுபோன்று செய்வதால் பூச்சி காதில் இருக்க முடியாமல் வெளியே வந்துவிடும்.


    மேலும் மிதமான சூட்டில் உள்ள நீரில் உப்பு கலந்து அதனை காதுகளில் விடலாம். உப்பு கலந்த நீர் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால் அது உடனே காதுகளில் இருந்து வெளியே வந்துவிடும்.

    காதில் பூச்சி, எறும்பு புகுந்துவிட்டால் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

    * பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருகளை வைத்து எடுக்க முயற்சி செய்யக்கூடாது. இப்படி செய்தால் பூச்சி மேலும் உள்ளே சென்றுவிடும். அதுமட்டுமின்றி காது ஜவ்வும் சேதம் அடையக்கூடும்.


    * காதுக்குள் பூச்சி சென்றால் உடனே விரலை வைத்து அதனை அகற்ற முயல வேண்டாம். வலுக்கட்டாயமாக இவ்வாறு செய்வது வலியைத்தான் ஏற்படுத்தும்.

    * சிலர் காதுகளில் பூச்சி சென்றால் தீக்குச்சியில் மருந்து இல்லாத மறுமுனையை காதுகளில் நுழைத்து எடுக்க முயற்சி செய்வர். அவ்வாறு செய்வது தவறு. இதனால் காதின் உட்புற பகுதி சேதம் அடையக்கூடும்.

    * தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றியும் காதில் உள்ள பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை வந்தால் உடனே அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    * வீட்டின் சூழலை சுத்தமாகவு வைத்திருக்க வேண்டும். படுக்கை அறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும். உணவு, தின்பண்டங்களை படுக்கை அறையில் சாப்பிடவோ, உணவு துணுக்குகளை சிந்தவோ கூடாது.

    * வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும்.

    பூச்சிகள் காதுக்குள் புகுந்துவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் வெளியே செல்லும் போது காதுகளை மூடி பாதுகாக்க வேண்டும்.

    ×