என் மலர்
நீங்கள் தேடியது "ராஸி வாண்டர் டுசன்"
- ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான்.
- இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மற்ற 3 அணிகளான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்காக போராடி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பிற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் மட்டுமே விளையாடுகிறது.
இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்திய அணி மட்டுமே ஒரே இடத்தில் இருந்து விளையாடி வருகின்றனர். மற்ற அணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா வீரரான ராஸி வாண்டர் டுசன் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான். இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
என ராஸி வாண்டர் டுசன் கூறினார்.