search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94317"

    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    ரம்யா கிருஷ்ணன்
    ரம்யா கிருஷ்ணன்

    இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார். 

    ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமலை, நடிகர் ரஜினிகாந்த் போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.
    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார். 

    ரஜினி - கமல்

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என்று கூறினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், போன் மூலம் கமலை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்.

    நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.
    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

    கமல்

    இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
    நடிகர் கமல் தனது பிறந்தநாளை முன்கூட்டியே விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.
    கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    படக்குழுவினர்

    நடிகர் கமல் தனது பிறந்தநாளை நவம்பர் 7 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். இதையொட்டி விக்ரம் படக்குழுவினர் இன்றே படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் பகத் பாசில், நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ராஜ்கமல் பிலிம்ஸ் நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
    பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    கமல்ஹாசனின் புரோமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் மூன்றாவது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளரை உறுதி செய்திருக்கிறார்கள்.

    அந்தப் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா. சின்னத் திரையில் `சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் காமெடி செய்தவர். சில மாதங்களுக்கு முன்பு உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்துகொண்டார்.



    `மணமாகி கொஞ்ச நாளிலேயே கணவரை மூன்று மாதங்கள் பிரிந்து எப்படி பிக் பாஸ் வீட்டுக்கு’ என்றால், ``அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச வி‌ஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கறதில்லையே! பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க’’ என்கின்றனர் மதுமிதாவுக்கு நெருக்கமானவர்கள்.
    பார்த்திபனின் ஒத்த செருப்பு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
    பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல், இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    இதில் கமல் பேசும்போது, எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். அதை நான் திரும்பி திரும்பி படித்தேன். அதில், காந்தி அவர்கள் ரெயிலில் செல்லும் போது, ஒரு செருப்பு தவறி விழுந்துவிட்டது. உடனே அவர் மற்றொரு செருப்பையும் கழற்றி வீசி விட்டார். ஏன் என்று கேட்டதற்கு ஒரு செருப்பு இருந்தால் யாருக்கும் உபயோகப்படாது என்று கூறியிருக்கிறார். அவரின் ரசிகர் நான்.



    அவர் போட்ட செருப்பில் ஒன்று வந்து சேர்ந்துவிட்டது. இன்னொன்றும் வரும். அதற்கான அருகதை எனக்கு உண்டு. அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் மேல் செருப்பு வீசியதை பலரும் பயந்து பயந்து பேசுகிறார்கள். இதில் ஒரு பயமும் இல்லை. செருப்பு போட்டவருக்கே அவமானம்’ என்றார்.
    அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் விமர்சிக்கும் கமல்ஹாசன் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.

    மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். 

    சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர்.

    ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #Kamalquestions #KamalPoliticalEntry #MNM

    அவரது வீடியோ பதிவைக்காண..,



    நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். #Shrutihaasan #Kamalhaasan
    ஸ்ருதிஹாசன் 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் விலகி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

    “நான் இங்கிலாந்தில் ஒரு இசை ஆல்பம் தயார் செய்யும் வேலையில் இருக்கிறேன். பாடலை நானே எழுதுகிறேன். சினிமாவில்தான் நடிக்கவில்லையே தவிர ஓய்வு எடுக்கவில்லை. இசை பணிகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பேன். தமிழ் படமொன்றில் நடிக்க இருக்கிறேன்.

    இந்தி படமொன்றுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன். 10 வருடங்கள் நடித்து விட்டேன். கதாநாயகி போட்டியில் பின் தங்கிவிடுவேன் என்ற பயம் இல்லை. இசை ஆல்பம் வேலைகளை ஆரம்பித்ததால் நடிப்பதை தள்ளி வைத்து இருக்கிறேன்.



    எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன். நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து.

    இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
    மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு உடனே சென்னைக்கு திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை. முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து இருந்தார்.


    அடுத்து கட்சி தொடங்காமல் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்த போது 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி சந்தித்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது. #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து போட்டியா?

    பதில்:- நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நான் கூறியதில் இருந்தே முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு இடமில்லை என்றுதான் அர்த்தம். நாங்கள் முதலில் சொன்னதில் இருந்து மாறுபடவே இல்லை. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி. மக்களுடனான கூட்டணி, மக்கள் ஆட்சி வரப்போகும் நேரத்தில் மக்களின் கூட்டணியில் இருப்பதுதான் நியாயம்.

    கே:- அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்களது தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

    ப:- நல்ல தேர்தல் அறிக்கையை கொடுப்போம். அதை நாங்கள் படித்துப் பார்க்கும்போது மனசாட்சியை தொட்டு இதை வெளியே படிக்கலாமா? இதில் எத்தனை பொய் இருக்கிறது? எத்தனை சாத்தியம்? இது நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்குறுதிகள்தானா? என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புத்தகமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

    கே:- நேர்க்காணல் எப்போது?

    ப:- வருகிற 11,12,13,14,15 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும். 1137 மனு வந்திருக்கிறது. அதில் இருந்து நல்லதை தேர்வு செய்வோம். ஒளிவீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதற்கான ஏற்பாடுகள் இந்த 5 நாளில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்து, யார் யார் எங்கெங்கே என்று உங்களுக்கு பெருமையுடன் மார்தட்டி சொல்வோம்.

    கே:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட வில்லையே?

    ப:- சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.

    நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

    கே:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?

    ப:- அதைப்பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக நிற்கிறது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முழுமையாக அந்த வியாபாரத்துக்கு போய் விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும்.

    படிப்படியாக என்பதுதான் நடக்கக்கூடிய வி‌ஷயம். அரசு ஆணை மட்டும் போதாது. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது கெட்ட பழக்கம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு எந்த அரசாக இருந்தாலும் வேலை எளிதாகிவிடும்.

    கே:- உங்களின் நெருங்கிய நண்பர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். நண்பர் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?

    ப:- ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய வி‌ஷயம். கேட்காமல் பெறுவதும் பெரிய வி‌ஷயம்.

    கே:- ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறீர்களா?

    ப:- நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

    கே:- 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

    ப:- கண்டிப்பாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?

    ப:- கண்டிப்பாக! எங்கே என்பதை நான் சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக  அவர் ஆலோசித்தார். வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    எங்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள் உள்ளனர். நான் வக்கீலாக வேண்டும் என்று எனது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அது நடக்கவில்லை. ஆனால் இன்று அந்த குறையை போக்கும் விதத்தில் எனது கட்சியை சேர்ந்த வக்கீல்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இருக்கிறீர்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் கொண்ட வக்கீல்கள் குழு அமைக்கப்படும். எங்காவது ஓரிரு இடங்களில் பிரச்சனை நடந்தால் ஒரே நேரத்தில் அவற்றை தீர்ப்பதற்காக 6 பேர் குழுவுக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்படும்.

    அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சென்று தீர்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று நமது கட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார். #Election2019 #MNM #Kamal
    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இந்நிலையில் இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள கமல், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம்தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் வழங்கப்படவில்லை. #Election2019
    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கமல்ஹாசன் விருப்ப மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதேவேளையில் தங்களுக்கு ‘மோதிரம்’ சின்னம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, அச்சின்னம் வழங்கப்படவில்லை. மாறாக தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
    ×