search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94423"

    தகட்டூர் பைரவர் கோவிலில் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது.
    வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பைரவர் அவதரித்த நாளான நேற்று கோவிலின் மகா மண்டபத்திற்கு எதிரே ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், கோவில் எழுத்தர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்ம ஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

    முன்னதாக வடுக பைரவருக்கு 21 வகையான பெருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. யாக வேள்விகள் நடைபெற்று ரவி குருக்கள் தலைமையில் வடுக பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக இடை வெளி யோடு பக்தர்கள் கலந்துகொண்டு வடுக பைரவரை தரிசனம் செய்தனர்.

    நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
    கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட விழா அரங்கில் காலை 9 மணிக்கு மஹா கணபதி வேள்வியும், 10 மணிக்கு 152 தம்பதிகள் பூஜை, 152 மகாயாகம், அபிஷேகமும் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து 12 மணிக்கு ருத்ர பாராயணம், 12.30 மணிக்கு ருத்ர ஹோமமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோவை யில் உள்ள அனைத்து மடங்களின் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை ஶ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், நிர்வாக குழு சிவ ஶ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.
    கார்த்திகை பைரவாஷ்டமியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் உள்ள சம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.

    இதை தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் உள்ள சிம்மவாகன காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர், தகட்டூர் பைரவர் கோவில் உள்ளிட்ட பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமியையொட்டி நாளை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 6.30. மணிக்கு அலங்கார தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது.
    அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். அதிலும் தேய் பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை மகேஸ்வராஷ்டமி என்பர். இது பைரவரின் ஜென்மாஷ்டமி ஆகும். இதனை காலபைரவாஷ்டமி எனவும் அழைப்பர்.

    புதுவை கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன. மதியம் 1 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், யாக பூஜை நிறைவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில் பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார்.
    சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

    சிவகங்கைப் பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்து வந்தபோது, ஒரு போரில் பெரிய வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் கோவில் அமைப்பது என்பதில் அவருக்கு குழப்பம் இருந்தது. அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், பெரிச்சிக்கோவில் பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே கோவில் அமைக்கும்படியும் கூறினார். அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் கோவில். வாசனை மலர்கள் நிறைந்த பகுதியில் இந்த இடம் அமைந்த காரணத்தால், இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

    இது பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள். மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.

    இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.
    ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும்.
    சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், பைரவர் வடிவம் முக்கியமானது. பைரவருக்கு பல்வேறு தலங்களில் சன்னிதிகள் இருக்கின்றன. காசியில்தான் பைரவருக்கு தலைமைபீடம் அமைந்திருக்கிறது. அங்கு அவர் காலபைரவர் என்று போற்றப்படுகிறார். காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் சொர்ணாகர்ஷண பைரவர், சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவர் என்று சிறப்புமிக்க பைரவர் வழிபாட்டு தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், பைரவபுரம். இது அழிவிடைதாங்கி என்று அழைக்கப்படுகிறது.

    கஷ்டங்களை போக்கும் சொர்ணகால பைரவர்

    பழங்காலத்தில் இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை பல்லவர்களும் சோழர்களும் ஆட்சி செய்தபோது, இங்கு சைவ நெறி தழைத்தோங்கியது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு ஆட்சி செய்தான். அப்போது வடக்கே இருந்து யாதவராயன் என்ற மன்னன் படையெடுத்து வந்தான். இருவருக்கும் இடையே பெரும்போர் மூண்டது.

    முதல் நாள் நடந்த போரில் சம்புவராயன் படைகள் சேதமடைந்தன. அன்று இரவு பைரவரை வேண்டி அடுத்த நாள் போரில் கலந்து கொண்டார். அடுத்தநாள் சம்புவராயன் பெரும் வெற்றி அடைந்தான். இந்த வெற்றியை அருளிய சொர்ண காலபைரவருக்கு பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினான்.

    இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சிதருகிறார். இங்கே பைரவரின் எட்டு கோலங்களையும் சுதை வடிவில் தரிசிக்கலாம். பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர், மகேஷ்வரியுடன் ருரு பைரவர், கவுமாரியுடன் சண்ட பைரவர், வைஷ்ணவியுடன் குரோதண பைரவர், வராகியுடன் உன்மத்த பைரவர், இந்திராணியுடன் கபால பைரவர், சாமுண்டியுடன் பீஷண பைரவர், சண்டிகையுடன் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்கள் அருள்கிறார்கள். ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்து நான்முகனாக ஆக்கினார், பைரவர். அந்த பிரம்மா வழிபட்ட தலம் இந்த ‘பைரவபுரம்’ என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஆகியவற்றை தரித்தவராக மூன்று கண் கொண்டவராக பைரவர் தரிசனம் தருகிறார்.

    வெள்ளிக்கிழமை மாலை வில்வத்தினால் அர்ச்சனை செய்துவந்தால், வறுமை நீங்கும். ஏதாவது ஒரு தேய்பிறை அஷ்டமியில் விரதம் தொடங்கி, தொடர்ச்சியாக 11 தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளிப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் குழந்தைபேறு கிடைக்கும். 7 மிளகுகளை துணியில் கட்டி, நல்லெண்ணைய் விட்டு தீபம் ஏற்றினால், இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில், பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். நவக்கிரக தோஷங்களும் விலகும்.

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ளது, அழிவிடைதாங்கி கிராமம். காஞ்சிபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம்.

    அழிவிடை தாங்கி பைரவபுரம் கால பைரவரை வணங்கினால் முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். பில்லி சூனியம் விலகும்.
    பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள்.

    சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம்.கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும்.பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும்.பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

    தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

    காலபைரவர் அல்லது மார்த்தாண்ட பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது உகந்தது. தொடர்ந்து எட்டு அஷ்டமியில் இந்த பைரவரை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். அடகுவைத்த நகைகளை திருப்பும் வாய்ப்பும் கிட்டும்.

    தேனும், பாலும் கலந்து பைரவருக்கு அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் அகலும். பொதுவாக அஷ்டமி திதியில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை தீபமேற்றி வழிபட்டால் வராத கடன்கள் கூட வசூலாகும். வாழ்க்கை வளமாகும்.

    இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

    தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் மலர் அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. பூஜையில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. 5 காலமாக இந்த பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்களால் வழங்கப்பட்ட பால், தேன், இளநீர், அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சொர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் பைரவருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரை சேர்ந்த குருக்களால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அப்போது, ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் பழனி முருகன் கோவிலில் மங்கம்மாள் மண்டபத்தில் உள்ள சேத்தர பால பைரவருக்கும், சண்டிகாதேவிக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×