என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94726"

    • பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

     திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது பள்ளி, கல்லூரிக்கு அருகில் செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்றனா்.

    இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவலரை அமா்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
    • தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தி.மு.க. தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் கூட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தி.மு.க. அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோவில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும் தான்.

    அவர் இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை கண்டுகொள்ளமாட்டார். தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தீண்டாமை ஒழிப்பில் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல், அரசியல் செய்யாமல் களப்பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் மிகவும் தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்கிறது. இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தி.மு.க. என்றாலே இரட்டை வேடம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார்.
    • பிரதமரின் வழிகாட்டுதல் படி வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது

    உடுமலை :

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. மற்றும் வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா விழிப்புணர்வு பேரணி உடுமலையில் நடந்தது.

    குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவரும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சண்முகப்பிரியா, மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பார்வையாளர் மலர்க்கொடி, ஜோதீஸ்வரி, கந்தசாமி, தென்னிந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் ராகுல், ராஜா, முத்துசாமி, மாவட்ட செயலாளர் வடுகநாதன், கண்ணாயிரம் ,சமூக ஆர்வலர் குரு பிரசாத் ,சித்த மருத்துவர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயத்ரி ரகுராம் கூறுகையில், பிரதமரின் வழிகாட்டுதல் படி உடுமலையில் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் பா.ஜ.க. சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை போற்றும் வகையில் தீபாவளி, பொங்கல் கொண்டாடுவது போல் சுதந்திர தினத்தையும் கொண்டாட வேண்டும். சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார். 

    • காயத்ரி ரகுராம் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    பா.ஜ.க. வெளிநாடு வாழ் ,அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தாராபுரம் பஸ் நிலையம் வடபுறம் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில்மாவட்டத் தலைவர் மங்களாபாளையம் ரவி,பா.ஜ.க. பொருளாளர் சுப்பு என்ற சிவசுப்பிரமணியம்,மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி, மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார், விஜயசந்திரன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன்,நகரத் தலைவர் செந்தில் தாஸ், நகர பொதுச்செயலாளர்மேஸ்திரி கதிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊர்வலம் பொள்ளாச்சி சாலை வழியாக குட்டை திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் வந்து சேர்ந்தது.
    • ஊர்வலப் பாதையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

    உடுமலை :

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சுதந்திர தின பவள விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாளை சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின பவள விழாவை கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திர தின பவள விழா ஊர்வலம் நடந்தது.

    உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். உடுமலை நகரத் தலைவர் எம்.கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரிகந்தசாமி, மருத்துவ அணி தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் விஜய் கண்ணா, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சிவலிங்கம், தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் சித்தாந்தன், பாரதிய ஜனதா கட்சி உடுமலை நகர துணைத் தலைவர் உமா.குப்புசாமி, பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மகளிர் அணி தலைவி ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் பொள்ளாச்சி சாலை, பழைய பேரூந்து நிலையம், தளி சாலை வழியாக குட்டை திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் வந்து சேர்ந்தது.ஊர்வலப் பாதையில் பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.

    • 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது.
    • இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பா.ஜ.க. சார்பில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வாகன பேரணி நடைபெற்றது.

    பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணி கணபதிபாளையம் மற்றும் கரைப்புதூர் வழியாக நடைபெற்றது. இதில் ஒன்றியத் தலைவர் பூபாலன், மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், நித்யா ஆனந்தகுமார், யுவராஜ், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இரு சக்கர வாகன பேரணியில், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் மயில்சாமி, பிரதீப் சக்தி ரமேஷ் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன் தலைமை வகித்தார். வர்த்தகர் அணி செந்தில்குமார், பொருளாதார அணி மனோகர் ,ஒன்றியத் தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில்,அரசு மதுபான கடைகளில் விலை அதிகம் வைத்து மதுபானம் விற்பதை தடுக்க வேண்டும், காரணம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நீர் பாசன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாத்திட வேண்டும் , காரணம் பேட்டை சிக்னலில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில்,திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வில் 2 இடம் பிடித்த காரணம்பேட்டையை சேர்ந்த பாலசண்முகத்திற்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பல்லடம் நகர பா.ஜ.க செயற்குழு கூட்டம் நகர தலைவர் வடிவேலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் அணி மாநில செயலாளர் சுதா மணி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வினோத் வெங்கடேஷ், மற்றும் நிர்வாகிகள் மணிவேல், மனோகரன், பன்னீர் செல்வகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ், ஈஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல பல்லடம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, விவசாய அணி ரமேஷ்,மற்றும் குருமூர்த்தி,உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
    • பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் மங்களம் என். ரவி , திருப்பூர் தெற்கு மாவட்ட பார்வையாளரும் மாநில செயலாளருமான மலர்கொடி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் உடுமலை நகர்மன்ற தலைவருமான ஜோதீஸ்வரி கந்தசாமி , மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் குட்டியப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வடுகநாதன் மற்றும் குருபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் ராஜா, ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் விஸ்வநாதன், உடுமலை நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், சிவசங்கர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய கிளை, அணி,பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில துணைத்தலைவர் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பார்வையாளர் மலர்க்கொடி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், மாநில ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் குட்டியப்பன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குரு பிரசாத்,உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம் ,உடுமலை நகர பொதுச்செயலாளர்சீனிவாசன்,உடுமலை நகர பொதுச்செயலாளர் சிவசங்கர்,உடுமலை நகர பொருளாளர் அய்யப்பசாமி, உடுமலை நகர துணை தலைவர்கள்உமா குப்புசாமி, கொண்டம்மாள், ,தம்பிதுரை,கண்ணப்பன், கணேஷ் ,ஆனந்த் ,புவனேஸ்வரி, பாலு,நகர செயலாளர்கள் நாகவேணி,சிவசங்கர், முருகேசன், வெங்கடாசலம், செல்வராஜ், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • சொத்து வரி உயர்வு, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
    • அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத்தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பார்வையாளர் ஜி.கே.செல்வகுமார், கோவை பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் பாலகுமார், ஈரோடு கோட்ட பொறுப்பாளர் பாய்ண்ட் மணி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் நடராஜ், மற்றும் நிர்வாகிகள் ,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, தமிழக அரசுமின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்லடம் பேருந்து நிலையம் அருகே திருச்சி கோவை மெயின் ரோட்டில் மேம்பாலம் பணி மற்றும் நிதி ஒதுக்கிய பல்லடம் புறவழிசாலை திட்ட பணியை விரைவில் துவங்கவேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுபள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள்இல்லாமல் மாணவர்களின் கல்வி இன்று கேள்விகுறியாக இருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் தகுதி அடிப்படையில் திறமைவாய்ந்த ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.திருப்பூர் மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமாக பயன்படுத்த முடியாதஅளவில் உள்ளது. அதனால் விபத்துகள் அதிக அளவில் நடந்து உயிரிழப்புகள்ஏற்படுகிறது. அதை மாநில அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும்.

    பெண்கள் இலவச பயணம் என்ற நடைமுறைக்கு பின் டவுன்பஸ் எண்ணிக்கையைகுறைத்துவிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.மத்திய அரசின் ஆவாஸ்யோஜனா (அனைவருக்கும் வீடுகட்டும்திட்டம்) ஏழைமக்களுக்கான மத்திய அரசின் இத்திட்டத்தினை மாநில அரசு சரிவரசெயல்படுத்துவதில்லை .திட்டத்தினை மாநில அரசு ஏழை மக்களுக்கு கொண்டு செல்லும்வகையில் செயல்படுத்த வேண்டுகிறோம்.

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர்கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்க போட்ட தீர்மானத்தை திருப்பூர் மாநகராட்சி ரத்து செய்து முன்னாள்சேர்மன் கே.என். பழனிச்சாமி கவுண்டர் பெயரை வைக்கவேண்டும்.ஆழியாறு-நல்லாறு இணைப்பு பணியை விரைவில் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
    • தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது.

    அவிநாசி :

    அத்திக்கடவு திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் 2019 டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது. 2021 ஜனவரியில் நிறைவு பெற வேண்டிய நிலையில் 96.5 சதவீத பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் தொய்வு பெற்று, 3.5 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளது. வரும் பருவ காலத்துக்குள் திட்டம் நிறைவேற்றப்பட்டால் உரிய பயனடையலாம். இல்லாவிட்டால் வறட்சியை சந்திக்கக் கூடும்.

    போதுமான நிதியும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 கி.மீ தொலைவுக்கு முள்ளம்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், காளிங்கராயன்பாளையம் நில உரிமையாளா்களுக்கு நிதி வழங்க அரசாணை வெளியிடாததால் கடந்த 3 மாத காலமாக பணி தடைபட்டு நிற்கிறது. மேலும் விடுபட்டுள்ள 800 குட்டைகளை விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே, நில உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகைக்கான அரசாணையை வெளியிடாவிட்டால் ஆகஸ்ட் 12ந்தேதி அவிநாசியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முடிவு செய்துள்ளோம் என்றாா்.

    • பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    • கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தென்மாபட்டியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினரும் ஜி.ஜே. அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் ஜெயபால், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், திருப்பத்தூர் சகாதேவன், சேது.சிவராமன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சொக்கலிங்கம், மாநில ஓபிசி அணி செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், கிளை தலைவர்கள், கட்சி தொண்டர்கள் தென்மாபட்டி கிராமத்தினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டி நன்றி கூறினார்.

    • உசிலம்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மின்சார கட்டண உயர்வை கண்டித்து உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளர் மொக்கராஜ், மகளிர் அணி மாவட்ட துணை தலைவி இன்பராணி, நகரத் தலைவர் முத்தையா, ஒன்றிய தலைவர்கள் உசிலம்பட்டி கருப்பையா, சின்னசாமி, செல்லம்பட்டி செல்லம், சேடப்பட்டி மருது காளை, பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    ×