என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94877"

    கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சிவசங்கர் மாஸ்டருக்கு பிரபல நடிகர் உதவி செய்து இருக்கிறார்.
    இந்திய சினிமா உலகில் நடிகர் மற்றும் நடன இயக்குனராக திகழ்பவர் சிவசங்கர் மாஸ்டர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தது. 

    இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. 

    தனுஷ்
    தனுஷ்

    இந்த நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு நடிகர் தனுஷ் உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் தான் நடனம் அமைத்து இருந்தார். 

    ஏற்கனவே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

    மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு
    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    ஆடுகளம் படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை டாப்சியும் கேம் ஓவர் படத்தின் மூலம் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.
    `மாயா', `இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து `கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ், நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

    தனுஷும், டாப்சியும் இணைந்த நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்குப் பிறகு கேம் ஓவர் படத்தின் டிரைலரை வெளியிடுவதன் மூலம் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
    மாரி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

    ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



    கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
    தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான மாரி 2 படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடித்த பிரெஞ்சு-ஆங்கில திரைப்படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்'. இந்த படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

    ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.



    கடந்த ஆண்டு மே மாதம் பிரான்சில் ரிலீஸான இந்த படம், தமிழில் வருகிற ஜூன் 21-ந் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒய்நாட் எக்ஸ் சார்பில் சசிகாந்தின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

    அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசையமைத்துள்ளார்.


    இது குறித்து தனுஷ் கூறுகையில் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' இந்தியாவிற்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதை என்னை கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் இறங்கவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” என்றார்.

    சினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    நடிகர் தனுஷின் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்த படம் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தனுஷ் திரையுலகிற்கு வந்து 17ம் ஆண்டு நிறைவையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர். 

    இதுகுறித்து நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகி விட்டது. என்னால் நம்பவே முடியவில்லை. எதுவும் தெரியாத சின்ன பையனாக இருந்த எனக்கு உங்கள் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். நடிகனாகக்கூட முடியாது என்று நினைத்த என்னை ஒரு ஸ்டாராக மாற்றி இருக்கிறீர்கள், எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.



    என்னுடைய வெற்றி தோல்வி எல்லாவற்றிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். நான் சரியான மனிதன் கிடையாது ஆனால் உங்களுடைய அளவுகடந்த அன்பு, என்னை பன்படுத்தி வளர்த்திருக்கிறது.

    உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள், இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை ரசிகர்களாகிய நீங்கள் வெளியிட்டிருந்த போஸ்டர்களை பார்த்து நான் இன்னும் ஊக்கம் அடைந்திருக்கிறேன். இந்த அன்பு எப்போதும் வேண்டும், அன்பை பரவச் செய்யுங்கள் அன்பு மட்டும் உலகத்தை உருவாக்கும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கூர்கா’ பட டீசரை நடிகர் தனுஷ் வெளியிட இருக்கிறார். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
    சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.



    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இப்படம் கோடை விருந்தாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். #GurkhaTeaser #YogiBabu #Dhanush
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhanush #Sneha
    எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார்.

    இந்தப் படத்தில் தனுசுக்கு இரட்டை வேடம் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    குற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் அப்பா தனுசின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர். #Dhanush #Sneha

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மே மாதம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ENPT #Dhanush
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

    படத்தின் டிரைலர் தயாராகி இருக்கும் நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வருகிற மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.



    இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். 

    தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush
    அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.

    இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சினேகா இணைந்து நடிக்கிறார்.



    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சரபம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Dhanush #Sneha #NaveenChandra

    தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடக்கும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தனர். #Dhanush #Snekha
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்து வருகிறது. அதை பார்வையிட்ட பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். 

    அவர்களை கோவில் பட்டாச்சாரியார்கள் வரவேற்று ஆண்டாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐஸ்வர்யா, நடிகர் பிரசன்னா ஆகியோர் ஆண்டாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து கோவில் யானைக்கு பழங்களை வழங்கிவிட்டு மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தனர்.



    சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் இருவருக்கும் ஆசி வழங்கினார். தொடர்ந்து ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். #Dhanush #Snekha #AishwaryaDhanush #Prasanna

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில், படம் பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.



    சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.

    விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. #Dhanush #KarthikSubbaraj

    ×