என் மலர்
நீங்கள் தேடியது "slug 94998"
- தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோலிவுட் நட்சத்திரங்களும் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.

பேரக்குழந்தைகளுடன் ரஜினிகாந்த்
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடினார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படித்தில் நடித்து வருகிறார்.
- இவர் இன்று ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது நடிப்பாலும் திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர்
இவர் பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய தினங்களில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினியின் ரசிகர்கள் பலர் அவரை சந்திக்க சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தனர்.

ரஜினிகாந்த்
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.
- துப்பாக்கி சூட்டில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் நிலை உயிரிழந்தவர்களை விட கொடுமையானது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கை நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அப்போதைய கலெக்டர் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழக முதல்-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும். துப்பாக்கி சூட்டில் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் நிலை உயிரிழந்தவர்களை விட கொடுமையானது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கையில் மக்கள் நியாயமாக போராடிய போது, திட்டமிட்டு மறைந்து இருந்தும், துரத்தி சென்றும் மக்களை சுட்டுக்கொன்றது தெளிவாக தெரியவந்துள்ளது.
இந்த படுகொலையை நிகழ்த்திய போலீஸ் துறை அதிகாரிகள் குறித்தும், துணை நின்ற அரசு அதிகாரிகள் குறித்தும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை என்ற பெயரில் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுக்காமல், முழுமையாக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உச்சபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிக்கையில் கூறப்பட்டு உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும், சி.பி.ஐ. விசாரணையை ஏற்கமாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கண்டித்துள்ளது.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2008-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்க சொன்னார்.
- தான் பிறந்த நாச்சிக்குப்பத்தில் தாய்-தந்தைக்கு நினைவு மண்டபம் கட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி வந்ததில்லை. ரஜினி 2008ம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் கவனிக்க வைத்த விஷயம் கடமையைச்செய் பலனை எதிர்பார் என்ற வாசகம்.

அதோடு ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என்று ரஜினி உத்தர விட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று வாசிக்கப்பட்டது. அப்போது ரஜினியின் முகத்தில் ஏற்பட்ட பிரகாச ஓளி அவரது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

அந்த ரசிகர் யார் என்று ரஜினி கேட்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகர் எழுந்து நின்றார். அவர் மீது தனி பாசம் கொண்ட ரஜினி தன்னை வீட்டில் வந்து பார்க்கும்படி கூறினார். மறுநாள் வீட்டில் சந்தித்தவரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஊர் நிலவரம், நாச்சிக் குப்பத்தின் தற்போதைய சூழல் எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டவர் கார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார்.

கார்த்திகேயன் கேள்வி எழுப்பிய பிறகு நாச்சிக் குப்பத்தின் மீது ரஜினியின் பார்வை விழுந்தது. அங்கு தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழல் எல்லா வற்றையும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டே இருந்திருக்கிறார். தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார் ரஜினி. அங்கு ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்திருக்கிறது. அங்கு முதல் கட்டமாக வேலி அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார். வயல், விவசாயம் வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்க தண்ணீர் தொட்டியும் அங்கேயே கால்நடைகள் தண்ணீர் அருந்தும்படியான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த வசதியால் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியிருக்கிறது. தான் பிறந்த கிராமத்தை நினைவுபடுத்திய கிருஷ்ணகிரி கார்த்திகேயனிடமே இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்தார் ரஜினி. இது நடந்து பல ஆண்டுகள் ஆகின. பிறகு சில வாரங்களுக்கு முன்பு தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்தன.

தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாகக் கூறுப்படுகிறது.
- ‘ஜெயிலர்’ படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
புதுச்சேரி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
'ஜெயிலர்' படத்தின் முதல் கட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு கடலூர்-புதுவை எல்லையான அழகியநத்தம் (கடலூர் மாவட்டம்) தென்பெண்ணையாற்று பாலம் அருகே நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் புதுவையில் இருந்து கார் மூலம், கடலூர் சென்றபோது புதுவை எல்லை பகுதியான குருவிநத்தத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பளித்தனர். மேலும் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூச்சலிட்டனர்.
ரசிகர்களின் வரவேற்பை அடுத்து காரின் கண்ணாடியை திறந்து பார்த்து ரசிகர்களுக்கு ரஜினி கையசைத்தது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் ரஜினியை புதுவை மாநிலம் பாகூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
'ஜெயிலர்' படத்தில் நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு போன்ற காட்சி படமாக்கப்பட்டது. புதிதாக போடப்படும் குருவிநத்தம்-அழகியநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த காட்சிக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் தொகுதி எம்.எல்.ஏ.வான செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். அவர் தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரிடம் பேசி அனுமதி பெற்று தந்துள்ளார்.

ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
இதனையடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ.வை ரஜினி பார்க்க விரும்பினார். படப்பிடிப்பு தளத்தில் கேரவேனில் இருந்த ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார்.
அப்போது சிறுவயதில் இருந்து கமல் ரசிகரான தான் 'அண்ணாமலை' படம் பார்த்த பிறகு ரஜினிக்கும் ரசிகராகி விட்டேன் என செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறினார். இதற்கு ரஜினி தனது பாணியில் சிரித்து கொண்டே நன்றி... நன்றி என கூறியுள்ளார்.
ரஜினியை தி.மு.க. எம்.எல்.ஏ. சந்தித்தது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
- ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது. சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

அவர் கூறும்போது, ''பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியத்தேவனாக நினைத்து பார்த்தது உண்டு. மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியதும் அதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்று கேட்டேன். ஆனால் உங்கள் ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது என்று சொல்லி அவர் மறுத்து விட்டார்" என்றார்.

அப்போதே ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று ரஜினி கேட்டதாகவும், மணிரத்னம் சொன்ன ஒரு கரு ரஜினிகாந்துக்கு பிடித்து போனதாகவும், அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் மணிரத்னம் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இவர்கள் கூட்டணி மீண்டும் அமைந்தால் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி ஆகியோர் பெயர்களும் ரஜினி படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
- இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர்
இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன்.
- இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவர் தனது சிறந்த நடிப்பாற்றலால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வரும் இவர் இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அமிதாப் பச்சன் - ரஜினிகாந்த்
இவருக்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "தி லெஜண்ட். என்னை எப்போதும் ஊக்கப்படுத்திய ஒரு நபர். இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர் சூப்பர் ஹீரோ அமிதாப் பச்சன் 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு அன்பும் மரியாதையும் கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.
The legend.. someone who has inspired me always… the one true sensation and superhero of our glorious Indian film fraternity enters 80 .. happy birthday my dearest and most respected @SrBachchan Amitabh ji .. with lots of love and best regards always ❤️🙏🏻
— Rajinikanth (@rajinikanth) October 11, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
- இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியை சந்தித்த சரத்குமார்
இந்நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சரத்குமார், ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்' என பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள பெரிய பழுகுவேட்டையார் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜெயிலர்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

ரஜினிகாந்த்
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ரஜினியின் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இந்த ஃபிரேம் ஒருபோதும் தவறாக போகாது. இந்த முகமும் எப்போதும் தவறான கோணத்தில் இருக்காது. நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறது.
#nofilter needed,nothing false,flawless
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) October 5, 2022
A frame that can never go wrong..
A face that can never have a wrong angle. #fatherlove❤️
Positive priceless picture perfect
Hope all your days are as the above line states
Wishing everyone a happy #vijayadhasami
Shot on #iphone14promax pic.twitter.com/e6est0MDH4
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

பொன்னியின் செல்வன் - அருண்மொழி வர்மன்
இந்நிலையில் இப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயம் ரவி பதிவிட்டது, அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது இந்த வருடத்தை என் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா.
- இவர் தமிழில் புதிய படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.

ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது தமிழில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் முதல்முறையாக இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.