search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95494"

    • பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    திரவுபதி அம்மன் கோயில தீமிதி திருவிழாவை முன்னிட்டுகோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் கிராமவாசிகள் இறங்கி தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டுவிழாவில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
    முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். தலைமை குருநாதர் முதுகுளத்தூர் பாலகுருசாமி, குருநாதர் திருமாறன், ஜி.எம். மகால் தாமோதரன், சோனை மீனாள் கலைக் கல்லூரி தலைவர் அசோக்குமார், தாளாளர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாஸ்தா ஐயப்ப குழு தலைவர் குருசாமி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முனிய சாமி, இணைப்பொருளாளர் ராமர் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகன், முதுகுளத்தூர் ஐயப்பன் குழு நிர்வாகிகள் வழி விட்டான், காத்தகுளம் மலைச்சாமி, பாஸ்கரன் மணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாட்டினை முதுகுளத்தூர் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு செய்திருந்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன தானம் நடைபெற்றது.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய பூக்கள் அம்மனுக்கு சூட்டப்பட்டு பூ சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் நடப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது.

    7-ந் தேதி கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 8-ந் தேதி கம்பம் பிடுங்கப்படுகிறது. 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
    மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
    கங்காதேவி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது, பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால் உங்கள் பாவச்சுமை நீங்கும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களிலும் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் காசிக்கு இணையாக மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட பகுதி விளங்கி வருகிறது.

    துலா உற்சவத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை மயூரநாதர், அறம்வளர்த்த நாயகி அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை வதாணேஸ்வரர், விசாலாட்சி காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு கடந்த மாதம் 18-ந் தேதி ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. ஐப்பசி 21-ம் நாள் மயூரநாதர் கோவில், வள்ளலார்கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    நேற்று அபயாம்பிகை மயூரநாதர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதைப்போல தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை வதானேஸ்வரர் (வள்ளலார்) கோவிலில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய துலா உற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கடைமுக தீர்த்தவாரி நடைபெறுகிறது. 17-ந் தேதி.(புதன்கிழமை) முடவன் முழுக்கு நடக்கிறது. கடைமுக தீர்த்தவாரியன்று தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் முன்பு மூன்று கிளையுடைய வேப்பமர கம்பத்தினை நட்டு வைத்து புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த கம்பத்தினை ஆற்றுக்கு கொண்டு போய் விடுவதும் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் கலந்து கொள்ள திரளான பக்தர்கள் கரூருக்கு வருகை தருவதால் கம்பம் விடும் நாளில் கரூர் களை கட்டும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 12-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து கம்பத்தை தேடி சென்றனர். பின்னர் மூன்று கிளையுடைய வேப்பமர கம்பினை எடுத்து கொண்டு பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கோவிலின் பலிபீடம் எதிரே நட்டு வைத்தனர். பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து வேப்பிலையை சூட்டி அலங்கரித்து தினமும் பக்தர்கள் புனித நீரை எடுத்து வந்து குடம் குடமாக ஊற்றி வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் கோவில் பலிபீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    இதைதொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பிடுங்கி பூசாரி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேளதாள வாத்தியங்கள் முழங்கின. கோழிகள் பறக்க விடப்பட்டன. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்புறம் இருந்த அலங்கரிக்கப்பட்ட ரதத்தினுள் கம்பம் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் மல்லிகைபூவினை அதன் மீது தூவினர். பின்னர் அரிவாளை பிடித்து கொண்டு காவல் தெய்வம் மாவடி ராமசாமி முன்னே செல்ல அதனை தொடர்ந்து கம்பம் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.

    மாலை 6.50 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. அப்போது ஓம் சக்தி தாயே... பராசக்தி தாயே... என கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர். இதற்கிடையே அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு 7.05 மணியளவில் அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 
    தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது.
    தஞ்சையில் ஆண்டு தோறும் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்றது.

    இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து விநாயகர், முருகன், தஞ்சை மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், கீழவாசல் உஜ்ஜையினி மகாகாளியம்மன் கோவில் விநாயகர்,

    தெற்கு வீதியில் உள்ள கமலரத்ன விநாயகர் கோவிலில் இருந்து விநாயகரும் முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர். இதே போல் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் விநாயகர் கோவில், மாமாசாகிப்மூலையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், காமராஜர் மார்க்கெட்டில் உள்ள செல்வவிநாயகர் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து முத்துப்பல்லக்கில் விநாயகரும், முருகப்பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு மாமாசாகிப்மூலையை வந்தடைந்தது. அங்கிருந்து தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் மாமாசாகிப்மூலையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து தங்களது கோவில்களுக்கு சென்றடைந்தது. முத்துப்பல்லக்கு வீதி உலா நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த அக்கச்சிகுப்பம் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு பெரியக்குடி கொண்டா திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது சின்னக்குடி கொண்டா கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், வினோத்குமார் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாஸ்கரின் தம்பி பிரதாப் (21) திரவுபதி அம்மன் கோவிலுக்கு டிராக்டரில் தண்ணீர் ஏற்றி அச்கச்சிக்குப்பம் வழியாக ஓட்டிச்சென்றார்.

    இதனைக்கண்ட வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் டிராக்டரை மடக்கி நிறுத்த முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பிரதாப் வேகமாக டிராக்டரை ஓட்டினார்.

    வினோத்குமார் ஓடிச்சென்று டிராக்டரின் பின்பகுதியில் ஏறி டிரைவர் இருக்கையை நோக்கி சென்றார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். டிராக்டரின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் படுகாயமடைந்த வினோத்குமார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை விக்டர்ராஜா சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

    வினோத்குமார் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை கணபதிமாநகர் பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
    கோவை கணபதிமாநகர் பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் 18-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வேல்கம்பம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருச்சாட்டு விழா நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சக்திகரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். பின்னர். 9.30 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் குண்டம் அக்னி வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை விநாயகர் கோவிலில் இருந்து கரகம் ஜோடித்து அக்னி சட்டி, தீர்த்தக்குடம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். சிலர் கைகளில் குழந்தையை தூக்கிக்கொண்டு குண்டம் இறங்கினர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முன்பாக கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, சிங்காரிமேள கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். மேலும் பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு சென்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானமும், அதைதொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர் களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.

    9-ம் நாளான வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 10-ம் நாளான 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில், தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது.

    11-ம் நாளான 15-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடக்கிறது.
    அம்பை, கல்லிடைக்குறிச்சி கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    அம்பை காசிநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது.

    கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சத்யசீலன், ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சிவராமன், காசிநாதர் பக்தர் பேரவை சங்கர நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. 7-ம் திருநாளன்று காலையில் பச்சை சாத்தியும், தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் எடுத்து அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வருதலும், கும்பிடு நமஸ்காரம், அங்கபிரதட்சணம் ஆகியவையும் நடக்கிறது.

    பின்னர் மாலையில் அன்னம் சொரிதல், இரவில் அகஸ்தீஸ்வரருக்கு, சிவபெருமான் திருமண காட்சி கொடுக்கும் வைபவமும் நடக்கிறது. இதேபோல் அம்பை அகஸ்தீஸ்வரர் கோவிலிலும் 8-ம் திருநாளன்று மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் இரவில் பூக்கடை பஜாரில் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அம்பை, கல்லிடைக்குறிச்சி செங்குத்தர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகின்றனர்.
    ராஜபாளையம் அருகே பங்குனி உத்திர விழா: தீர்த்தம் சுமந்து பக்தர்கள் வழிபாடு
    ராஜபாளையம் சஞ்சீவிமலை கிழக்கு அடி வாரம் இந்திரா நகரில் ஜெய் காளியம்மன் கோவிலில் பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு கங்கா ஜல வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

    தர்மகர்த்தா செந்திலா திபன் மேற்பார்வையில் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் கோதண்டராமன் தலைமையில் சேலம் உதவி (கலால்) ஆணையாளர் ராமசாமி, ஜானகிராம் மில்ஸ் சுப்பிரமணியராஜா ஆனந்தாஸ் பீமராஜா, தொழிலதிபர்கள் சுப்ப ராஜா, ஹரிஹரன், பாரதிநகர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தர்மகிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அர்ச்சகர்கள் கோவிந்த ராஜ், சீத்தாராமன், வெங்கட் ராமன், சீனிவாசன், ஆகியோர் பூஜையை நடத்தி வைத்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் புண்ணியதீர்த்தங்களை சுமந்து அம்மனை வலம் வந்தனர்.

    அம்மனுக்கு வருஷா பிஷேகத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அன்னதானம் நடைபெற்றது.
    திருக்காட்டுப்பள்ளி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 20-ந் தேதி தீ மிதி உற்சவம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் காவடி ஊர்வலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்டது.

    பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவிலில் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து முருகன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீதி உலா வந்த முருக பெருமானை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    ×