என் மலர்
நீங்கள் தேடியது "slug 96268"
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.
அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் - நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், எச்.வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, போனிகபூர் - அஜித் - எச்.வினோத் கூட்டணி மீண்டும் இணைந்து வலிமை படத்தை தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அஜித், எச்.வினோத்
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது மீண்டும் அவ்வாறு நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங், பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படுவதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படம் குறித்து வில்லன் நடிகர் அபிமன்யூ சிங், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாத்த படம் விமர்சகர்களுக்காக எடுக்கப்பட்டது இல்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

அஜித் - அபிமன்யூ
அபிமன்யூ ஏற்கனவே விஜய்யுடன் தலைவா, சூர்யாவுடன் ரத்த சரித்திரம்-2, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்ததாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
விஸ்வாசம் படத்தில் உடல் தோற்றத்தை குண்டாக்கி வெள்ளை முடி தோற்றத்தில் நடித்த அஜித், தற்போது போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கோட்டு சூட்டு அணிந்து தனது தோற்றத்தை டிப் டாப்பாக காட்டியிருக்கிறார்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதை அடுத்து ஜிம்மிலேயே கிடந்து தனது உடல் எடையை நிறையவே குறைத்திருக்கிறார்.

90களில் பார்த்தது போல் தற்போது கனக்கச்சிதமாக உடல் தோற்றத்தை வடிவமைத்திருக்கும் அஜித் அந்த தோற்றத்துடன் வெளியிடங்களில் நடமாடத் தொடங்கியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் விஜய் - அஜித் ஆகியோர் அரசியல் வருகை குறித்து கூறியிருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மான்ஸ்டர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எலியை மையமாக கொண்ட படம் என்பதால் குழந்தைகள், குடும்பங்கள் ரசிக்கின்றனர். இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
’உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் ஸ்டுடியோக்களில் நடக்கும் படப்பிடிப்புக்கு 50 ரூபாய் கொடுத்து வேடிக்கை பார்ப்பேன். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்தபோது இந்த பயணம் பாலைவனமாகத் தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு எனக்கு நிறைவேறியிருக்கிறது.

இந்தப் புது பயணம் தொடரும். என் படத்துக்குக் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இத்தனை நாள் இதைத் தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. எலியால் தொடங்கிய இந்தப் பயணத்தை இதேபோல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.
அஜித் விஜய் இருவரையும் இயக்கியுள்ளீர்கள் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய், அஜித் இருவருமே எந்த முடிவெடுத்தாலும் அதைச் சரியாகச் செய்து வெற்றியடையக் கூடியவர்கள். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி. இருவருக்கும் வெற்றி பெறும் வல்லமை இருக்கிறது, ஆனால், அரசியலுக்கு வருவதுபற்றி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.
அஜித் சொன்ன ஒரு வார்த்தை தன்னுடைய காதில் ஒலித்துக் கொண்டு இருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith #Ghibran
வாகைச்சூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல விருதுகளையும், பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜிப்ரான். இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். மேலும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். விரைவில் அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A true fanboy moment 🤗 with #ThalaAjith sir! He IS what everyone says and even more, 🙏🏻 From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' 😍😍
— Ghibran (@GhibranOfficial) March 31, 2019
Gratitudes 🙏🏻 #sundaysweetdaypic.twitter.com/vW8AXLTfRf
அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகை மேகா ஆகாஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார். #MeghaAkash
கவுதம் மேனன் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். சில காரணங்களால் அப்படம் வெளிவராத நிலை உள்ளது. இதற்கிடையில் மேகாவுக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்பு நடித்த வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த அதர்வாவின் பூமராங் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் நல்ல படங்களில் நடிக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்த அவரிடம் விஜய், அஜித், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு ஜாலியாக பதில் அளித்தார். விஜய்யை பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுங்கள் என்றும், அஜித்தை பார்த்தால் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் கேட்பேன்.

டோனியை நேரில் பார்த்தால் சட்டென ஐ லவ் யூ சொல்லிவிடுவேன். மேகா ஆகாஷின் பதிலை கண்டு விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் மேகாவை கிண்டல் செய்து வருகின்றனர். டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்க மாட்டார். ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.
விஜய்யுடனும், அஜித்துடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Vijay #Ajith
‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.
நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
நடிகர் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிய பிரபல இயக்குனருக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள். #ThalaAjith #Ajith
பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை செய்து வருவார். தற்போது நடிகர் அஜித்துக்கு ஒரு கடிதம் எழுதி பதிவு செய்திருக்கிறார்.
இதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்..,’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்று அஜித் ரசிகர்கள் பதிவு செய்து ட்விட்டரில் டிரெண்டாக்கி இருக்கிறார்கள்.

அஜித் சில தினங்களுக்கு முன்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இயக்குனர் சுசீந்திரன் இவ்வாறு பதிவு செய்திருப்பது, விளம்பரத்திற்காகவும், அஜித்தின் கால்ஷீட்டிற்காகவும் இப்படி செய்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிங்க் ரீமேக்கில் நடித்து வரும் அஜித், அப்படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில் நீண்ட வசனம் பேசி அசத்தி இருக்கிறார். #Ajith #AK #Thala59
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தலைப்பு வைக்காத இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால், ஐதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர். ‘விஸ்வாசம்’ படமும் அங்கு படமாக்கப்பட்டது.

தற்போது நீதிமன்றம் சம்பந்தப்பட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் அஜித் பேசும் வகையில் நீண்ட வசனம் ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டார் அஜித் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவ்வளவு பெரிய வசனத்தை அஜித் ஒரே டேக்கில் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவும் எழுந்துநின்று கைதட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படம் தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar
அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கர்நாடகாவில் பிற மொழியிலிருந்து கன்னடத்தில் டப் செய்த படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. இதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Viswasam #AjithKumar #Nayanthara