என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96364"
கர்நாடக மேல்-சபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் கிராம ஸ்வராஜ் யாத்திரை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பிரசார கூட்டம் மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய விவசாயத்துறை இணை மந்திரி ஷோபா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி உலக தலைவராக வளர்ந்துவிட்டார். அத்துடன் பா.ஜனதாவையும் பெரிய கட்சியாக வளர்த்துள்ளார். சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியை விட பா.ஜனதா பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், ஊழலில் உலகிலேயே முதல் இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மோடி மீது ஒரு ஊழல் புகார் கூட இல்லை. மன்மோகன்சிங் பிரதமராக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தபோது அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அவரை யாரும் வரவேற்கவில்லை. அவரை எங்கே ஒரு மூலையில் நிறுத்தி வைத்தனர்.
ஆனால் மோடி வெளிநாடுகளுக்கு சென்றால், அதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி, ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி அவர் நடந்து கொண்டுள்ளார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஆயுதப்படைகளுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு ஷோபா பேசினார்.
இதில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பேசுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் பொய் பேசுவதில் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். பொய் பேசுவதற்கு என்று நோபல் பரிசு வழங்கப்பட்டால், அதை சித்தராமையாவுக்கு வழங்கலாம். கொரோனா தடுப்பூசி வந்தபோது, அதுகுறித்து காங்கிரசார் தவறான பிரசாரம் செய்தனர். அதை போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும் என்றெல்லாம் கூறினர். இன்று அந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள போட்டி போடுகிறார்கள்" என்றார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டினர் தேவையின்றி பிரச்சினை கிளப்புகிறார்கள். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது. பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதுடன் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவது தான் மேகதாது திட்டத்தின் நோக்கம். மேலும் அணையில் நீர் இருக்கும்போது, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் உதவும்.
தமிழகத்தினர், அரசியல் நோக்கங்களுக்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இதில் அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இது கர்நாடகத்தின் நிலரப்பரப்பிற்குள் செயல்படுத்தப்படும் திட்டம். காவிரி நீரை பெறும் உரிமை மட்டுமே தமிழகத்திற்கு உள்ளது. வெள்ளம் ஏற்படும்போது அந்த நீரை சேகரித்து வைத்து பயன்படுத்தினால் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை?.
கடலில் வீணாக போய் சேரும் தண்ணீரை சேகரித்து வைக்கவே இந்த திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த சட்டப்படி அனைத்து உரிமையும் அரசுக்கு உள்ளது. இந்த திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உள்பட எந்த தொந்தரவும் கிடையாது. அதனால் மேகதாது திட்ட பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் முதல் மேகதாது பகுதியில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் அதற்கான தேதியை அறிவிப்போம்.
தேர்தலை மனதில் வைத்தோ அல்லது வாக்குகளை பெறவோ இந்த பாதயாத்திரையை நாங்கள் மேற்கொள்ளவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு மேகதாது திட்டத்தை வகுத்து, திட்ட அறிக்கையை தயாரித்தது. மத்திய அரசு அனுமதி வழங்காததால் இந்த திட்ட பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.
கிருஷ்ணா மேல் அணை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நாங்கள் முன்பு பாதயாத்திரை மேற்கொண்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்வோம் என்று கூறினோம். அதன் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்தோம். இதில் அரசியல் கிடையாது. எங்களுக்கு விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் தான் முக்கியம்.மேகதாது திட்ட விஷயத்தில் நான் நாட்டின் பக்கம் நிற்பதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். நாங்கள் கர்நாடகம், கன்னடர்களின் பக்கம் இருக்கிறோம். மேகதாது திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இந்த பேட்டியின்போது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அவர் மண்ணின் மகன் என்று உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மக்கள் அவரது பேச்சை நிராகரித்துவிட்டனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் 2 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
அனைத்து மந்திரிகளும் அந்த தொகுதியில் தங்கி ஓட்டு சேகரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பா ஆட்சியில் நீடித்து இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு இவ்வாறு தான் வந்திருக்கும். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
பா.ஜனதா எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு மற்றும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.
ஹனகல் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி டெபாசிட் இழந்துள்ளது. தேவேகவுடா 10 நாட்கள் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர். அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை நம்பவில்லை. அந்த கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.
மக்களின் பிரச்சினைகள்
இந்த மாத இறுதிக்குள் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவில்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அங்கு சுவா்ண சவுதா கட்டப்பட்டது. பிட்காயின் வழக்கில் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை முதல்-மந்திரி கூற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜே.டி.எஸ். கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஜே.டி.எஸ். கட்சி தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல் மந்திரியாகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.
கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பா.ஜனதாவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பா.ஜனதாவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட ஜே.டி.எஸ். மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையா முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரப்பாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 4 தடவை முயற்சி செய்தார். ஆனால் 4 தடவையும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
காங்கிரசில் சில எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.
இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி எதிர்பார்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி இருக்கிறார்கள்.
இந்த அதிருப்தி எம்.எல். ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சிகளை குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யாவும் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார். குமாரசாமியை ஒதுக்கி விட்டு பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அவர் தூண்டி விட்டுள்ளார்.
அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சோமசேகர் எம்.எல்.ஏ. என்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ரகசியமாக கூட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ரகசிய கடிதம் அனுப்பி உள்ளார்.
இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற புதிய தலைவலியை குமாரசாமி எதிர்கொண்டுள்ளார். #Kumaraswamy #Siddaramaiah #congress
பெங்களூரு:
கர்நாடகாவில் தேவாங்கர் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சப்பாவை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசை மே 23-ந்தேதி கவிழ்க்க புதிய முகூர்த்த நேரம் குறித்துள்ளனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ந்தேதி அன்று மோடி ஆட்சி இருக்காது. கூட்டணி அரசு அமையாது. அது முடிவுக்கு வந்துவிடும்.
இதுபோன்று நேரம் குறிப்பது பா.ஜனதா தலைவர்களுக்கு வழக்கமாகி விட்டது. மீண்டும் முதல்- மந்திரியாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எடியூரப்பா இருக்கிறார். ஏற்கனவே அவர் முதல்- மந்திரியாக பதவி ஏற்று மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 2 நாளில் வீழ்ந்துவிட்டார்.
அவருக்கு சுயமரியாதை இருந்தால் மே 23-ந்தேதி நள்ளிரவில் முதல்-மந்திரி ஆவேன் என அறிக்கைகள் விடக்கூடாது.
அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் மீண்டும் முதல்- மந்திரி ஆவேன். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவேன். இதில் என்ன தவறு உள்ளது. கர்நாடகாவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறாது. ஒற்றை இலக்க எண்ணில் தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019
கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மண்டியா, துமகூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தல் தார்வார், பல்லாரி உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வட கர்நாடகத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பல்லாரியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:-
மோடி மீண்டும் பிரதமரானால் என்ன கதி என்ற ஆதங்கம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் அழிந்துவிடும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும். அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படும். இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கவில்லை.
ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த 8 பேருக்கு டிக்கெட் கொடுத்துள்ளோம். பா.ஜனதா வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 10-க்கு மேல் தாண்டக்கூடாது. காங்கிரஸ் கூட்டணி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக வாழவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை நான் பார்த்தது இல்லை.
நாட்டின் வளர்ச்சியில் மோடியின் பங்கு என்ன?. பல்லாரியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவேந்திரப்பா, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பா.ஜனதாவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், தேவேந்திரப்பாவை அக்கட்சியினர் அழைத்து சென்றுவிட்டனர். அவரிடம் அதிக பணம் உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, அவர் என்னிடம் வந்து டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டேன். அதனால் அவர் பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டார். நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தேன். மோடியும் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார்.
நான் 5 ஆண்டுகள் எத்தனை பணிகளை செய்துள்ளேன். அதற்கு விவரங்களை வழங்க தயாராக உள்ளேன். மோடி தனது பணிகள் குறித்து விவரங்களை வழங்க தயாரா?. மோடி நாட்டில் எங்காவது இலவசமாக உணவு வழங்கி இருக்கிறாரா?. விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரிடம் நான் கேட்டேன். அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
விவசாய கடன் தள்ளுபடி செய்ய என்னிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று சொன்னவர் எடியூரப்பா. அவர் தனது தோளில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019
கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பிரசாரம், செய்தியாளர்கள் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்தராமையா பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆனால், தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நெதர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் சரியான வாக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் மாறிவிட்டன.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்தன. அதேப்போல் இந்த தேர்தலிலும் மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனினும், இந்த தேர்தலில் தேசிய அளவில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இயலாது.
இந்திய அரசியலமைப்பு சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலையே வலியுறுத்துகிறது. மேலும் தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட வேண்டும். பாஜகவிற்கு மக்கள் நிச்சயம் நல்ல பாடத்தை இந்த தேர்தலில் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #ElectionCommission
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை குறி வைத்து நடத்தப்படுவதாக கூறி கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.
அன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும், 2 கட்சிகளின் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாருக்கு, வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் புகார் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் மாநில போலீஸ் டி.ஜி.பி நீலமணி ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) பிளாக் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் மீது கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
அதே நேரத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீசு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah
பெங்களூரு மத்திய பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் ரிஸ்வான் ஹர்ஷத் போட்டியிடுகிறார். நேற்று அவரை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஜமீர் அகமது கான் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அவர்கள் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிநகர் வார்டு, பின்னிப்பேட்டை, ஆசாத் நகர், சி.வி.ராமன் நகர், நாகவாரா, ஆவலஹள்ளி, மகாதேவபுரா ஆகிய இடங்களுக்கு கொளுத்தும் வெயிலில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ரிஸ்வான் ஹர்ஷத்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர். பின்னர் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எனது தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நடை மேம்பாலம், இந்திரா மலிவு விலை உணவகம், பெண்களுக்கு பி.யூ. கல்லூரி வரை இலவச கல்வி இப்படி பல்வேறு வசதிகளும், திட்டங்களும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால் பா.ஜனதா சார்பில் என்ன செய்து கொடுக்கப்பட்டது என்று கூறுங்கள் பார்ப்போம். இத்தொகுதி எம்.பி.யான பி.சி.மோகன் இதுவரை உங்களை(மக்களை) நேரில் சந்தித்து இருக்கிறாரா? சொல்லுங்கள் பார்ப்போம். மக்களுக்காக எதையும் செய்யாத பி.சி.மோகனை நீங்கள் தேர்தெடுக்க வேண்டுமா? அல்லது மக்களுக்காக பல திட்டங்களை செய்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி செய்த சாதனைகள் பூஜ்ஜியம் தான். அவர் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ததும், மங்கி பாத்தில் பேசியதும்தான் அவருடைய சாதனை. அதனால் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள்.
ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நாடு வளம் பெறும். கர்நாடகமும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #Congress #LokSabhaElections2019
முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறார். 86 வயதிலும் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் யாரை பற்றியும் தரக்குறைவாக பேச மாட்டேன். அவ்வாறு பேசும் பழக்கம் எனக்கு இல்லை. மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஊடகங்களுக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதாவின் சாதனைகள், தனிப்பட்ட பிரசாரத்தை ஒளிபரப்புவது போன்ற விஷயங்களை ஊடகங்கள் செய்கிறார்கள்.
பிரதமர் மோடி கர்நாடகத்தில் 6 இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்கள், தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக மோடிக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்கள். ஊடகங்களும் மோடிக்கு ஆதரவாக பேசுகின்றன.
இன்று ஆந்திராவுக்கு செல்கிறேன். சந்திரபாபு நாயுடு கட்சியின் பிரசாரத்தில் கலந்து கொள்கிறேன். 9-ந் தேதி (நாளை) முதல் நானும், சித்தராமையாவும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வருகிற 13-ந் தேதி வரை ஆதரவு திரட்ட உள்ளோம்.
நாங்கள் என்ன செய்துள்ளோம், அவர்கள் என்ன செய்துள்ளனர் என்று கூறி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். இறுதியில் கர்நாடக மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ செய்யட்டும்.
மண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. தேவேகவுடா குடும்பத்தை இலக்காக வைத்துக்கொண்டு சோதனை நடத்துகிறார்கள்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #Siddaramaiah
பெங்களூரு:
மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். அந்த தொகுதியில் போட்டியிட அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்காக காங்கிரசிடம் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் மாண்டியா தொகுதி ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா அறிவித்தார்.
இந்த நிலையில் டெல்லிக்கு வருகை தந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல விவகாரங்கள் டெல்லியில் நடைபெறும் தேர்தல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்படும்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் வகிக்கும் தொகுதிகளை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து முடிவாகவில்லை. ஜே.டி.எஸ்.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை நான் கூற முடியாது. மைசூரு தொகுதியை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து எனது கருத்தை கூட்டத்தில் தெரிவிப்பேன்.
மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடமாட்டார். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாண்டியா மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூட்டியது குறித்து எனக்கு தெரியவில்லை. அந்த கூட்டத்துக்கு மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் போகாதது குறித்தும் எனக்கு தகவல் இல்லை.
ஜே.டி.எஸ்.வுக்கு அளிக்கப்படும் தொகுதிகளில் யாரை வேட்பாளராக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. அதேபோல. எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் யாரை வேட்பாளராக்க வேண்டும் என்பதை ஜே.டி.எஸ்.வினர் எங்களுக்கு கூற முடியாது.
மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட நடிகை சுமலதாவுக்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே கூறி இருந்தேன். இந்த நிலையில் சுமலதாவின் பின்னணியில் நான் இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? நடிகை சுமலதாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக என் மீது குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை.
ஹாசன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மந்திரியுமான ஏ.மஞ்சு, காங்கிரசில் இருந்து விலகமாட்டார். குடும்ப அரசியல் மக்களவைத் தேர்தலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது.
மாண்டியாவில் நிகில், ஹாசனில் பிரஜ்வல் ஆகியோரை நிறுத்துவது ஜே.டி.எஸ்.வின் முடிவாகும். அது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #Congress- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்