search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாண்டியா தொகுதியில் காங்., வேட்பாளராக சுமலதா போட்டியிடமாட்டார் - சித்தராமையா
    X

    மாண்டியா தொகுதியில் காங்., வேட்பாளராக சுமலதா போட்டியிடமாட்டார் - சித்தராமையா

    மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை சுமலதா போட்டியிடமாட்டார் என்று சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Congress

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் எம்.பி.யாக இருந்தார். அந்த தொகுதியில் போட்டியிட அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்காக காங்கிரசிடம் டிக்கெட் கேட்டு இருந்தார். ஆனால் மாண்டியா தொகுதி ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா அறிவித்தார்.

    இந்த நிலையில் டெல்லிக்கு வருகை தந்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, வேட்பாளர்கள் தேர்வு செய்வது தொடர்பாக நடைபெற்ற காங்கிரஸ் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல விவகாரங்கள் டெல்லியில் நடைபெறும் தேர்தல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்படும்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் வகிக்கும் தொகுதிகளை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து முடிவாகவில்லை. ஜே.டி.எஸ்.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை நான் கூற முடியாது. மைசூரு தொகுதியை ஜே.டி.எஸ்.வுக்கு விட்டுக் கொடுப்பது குறித்து எனது கருத்தை கூட்டத்தில் தெரிவிப்பேன்.

    மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடமாட்டார். காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாண்டியா மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூட்டியது குறித்து எனக்கு தெரியவில்லை. அந்த கூட்டத்துக்கு மாண்டியா மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் போகாதது குறித்தும் எனக்கு தகவல் இல்லை.

    ஜே.டி.எஸ்.வுக்கு அளிக்கப்படும் தொகுதிகளில் யாரை வேட்பாளராக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. அதேபோல. எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் யாரை வேட்பாளராக்க வேண்டும் என்பதை ஜே.டி.எஸ்.வினர் எங்களுக்கு கூற முடியாது.

    மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட நடிகை சுமலதாவுக்கு வாய்ப்பில்லை என்று ஏற்கனவே கூறி இருந்தேன். இந்த நிலையில் சுமலதாவின் பின்னணியில் நான் இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? நடிகை சுமலதாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக என் மீது குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை.

    ஹாசன் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மந்திரியுமான ஏ.மஞ்சு, காங்கிரசில் இருந்து விலகமாட்டார். குடும்ப அரசியல் மக்களவைத் தேர்தலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தாது.

    மாண்டியாவில் நிகில், ஹாசனில் பிரஜ்வல் ஆகியோரை நிறுத்துவது ஜே.டி.எஸ்.வின் முடிவாகும். அது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.

     இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah #Congress
    Next Story
    ×