search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96529"

    மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்பட்டதால் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை.

    எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    தமிழக அரசு செயல்படுத்தி உள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் தற்போது அவசியமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இந்த திட்டம் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தை முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது.

    எனவே இல்லம் தேடி கல்வி திட்டம் அவசியமா? என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    நவம்பர் 1-ந்தேதி “தமிழ்நாடு நாள்” என அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் தேதியை மாற்றுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. சார்பில் 2-ந்தேதி நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்கிறார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் முடிவுகள், ‘‘ஆப்ரே‌ஷன் சக்சஸ் பட் பேசன்ட் டெட்’’ என்பது போல் உள்ளது. தி.மு.க.வின் வெற்றி, என்னை பொறுத்தவரை தமிழகத்திற்கு தோல்வி.

    கூட்டணியில் இருப்பவர்கள், கேபினேட் மந்திரி அந்தஸ்து பெற்று டெல்லி சென்றால் தான், திட்டங்களையும், தமிழ்நாட்டிற்கு வேண்டிய வற்றையும் உரிமையோடு கொண்டு வர வேண்டும்.

    கடந்த முறை, அ.தி.மு.க., வில் 37 எம்.பி.க்கள், இருந்தும், போனார்கள், வந்தார்கள். கேபினேட்டில் இருந்தால்தான், எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொண்டு வர முடியும். அந்த வகையில் தற்போது தி.மு.க., எதிர் அணியில் உள்ளது. இது எந்த வகையில் பலனளிக்கும் என்று தெரிய வில்லை.

    இந்தியா முழுவதும் ஒரு அலை வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் வருவதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. இதற்கு காரணம், கூட்டணி மற்றும் கேபினேட்டில் இல்லை. அது இந்த முறையும் தொடர்கிறது.

    இந்தியாவின் அங்கம் தமிழகம். தனியாக பிரிந்தால், நிச்சயமாக தமிழகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் கூட்டணி சார்பில் எம்.பி., இல்லாவிட்டாலும், உரிமையோடு கேட்டு, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இக்கூட்டணி நிச்சயம் தொடரும்.

    தே.மு.தி.க.வின் மாநில கட்சிக்கான அந்தஸ்து பறிபோகாது. கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தால், கேபினேட் பதவிகளை வாங்கி, நிறைய திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை மக்கள் தரவில்லை என்பது தான் எனது வேதனை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ் 3 லட்சத்து 21, 794 ஓட்டுகளும், விருதுநகரில் போட்டியிட்ட அழகர்சாமிக்கு 3 லட்சத்து 16,329 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    அதே நேரத்தில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட மோகன்ராஜ் ஒரு லட்சத்து 29,468 ஓட்டுகளும், திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன் ஒரு லட்சத்து 61,999 ஓட்டுகளும் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளனர். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா என வலுவான கூட்டணியில் இருந்தும் தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.மு.க. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.

    2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியில் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது. கட்சி தலைவர் விஜயகாந்தும் தோற்றுப் போனார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வி என தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2009-ல் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. தற்போது 2.19 சதவீதமாக சரிந்துவிட்டது. இதனால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.


    2005-ம் ஆண்டு மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி கட்சி தொடங்கிய விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்தே தேர்தலை சந்திக்கும் என்றார். அதன்படி 2006 சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 27 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளை பெற்று அசத்தியது.

    விஜயகாந்தும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே தேர்தலை சந்தித்து 8.38 சதவீத வாக்குகளை பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    2009 பாராளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீதமாக அதிகரித்தது. அதன்பின் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 29 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் கட்சியின் ஓட்டு சதவிகிதம் 7.9 ஆக குறைந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதோடு, வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று 104 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது. அக்கட்சி வெறும் 16 லட்சத்து34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதியிலும் தோற்றதோடு, வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்துவிட்டது.

    மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் 6 சதவீத ஓட்டுகளை ஒரு கட்சி பெற வேண்டும். ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அல்லது 6 சதவீத வாக்குகளையும் அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும்.

    ஆனால் தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்கள், வேட்பாளர்களுக்கும், தே.மு.தி.க சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


    பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை விட அதிகளவில் பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2வது முறையாக பாரத பிரதமராக பதவியேற்கவிருக்கும் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக, போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறப்போவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

    கரூர்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தே.மு.தி.மு.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈசநத்தம் மூன்றுரோடு, அரவக்குறிச்சி புங்கம்பாடி கார்னர், சின்னதாராபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொள்கை பிடிப்பில்லாதவர் தான் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிற்கிறார். சுயநலம் கருதி பச்சோந்தியாய் இருப்பவர்களை கண்டறிந்து தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அரவக்குறிச்சி தொகுதியில் நீண்ட நாட்களாக எம்.எல்.ஏ. இல்லாத சூழல் இருக்கிறது. இதனால் தொகுதிக்கு மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

    எனவே தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனுக்கு மக்கள் ஆதரவினை தர வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்த வரையில் ஒரு வாக்குறுதி சொன்னால் சொன்னது தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இதனால் மக்களின் எழுச்சியால் தமிழகம்-புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

    2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிற சமயத்தில் மின்தட்டுப்பாடு நிலவியது. அப்போது அதற்கு உரிய தீர்வு காணப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியது. இதனால் தற்போது எங்கும் மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. எங்களது கூட்டணி 2011-ல் அமைந்த கூட்டணி. ஆளும் கட்சி-எதிர்கட்சியாக அமைந்த கூட்டணியாகும்.

    சில துரோகிகளின் செயலால் அன்று கூட்டணி பிரிக்கப்பட்டது. ஆனால் கடவுளின் அருளால் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2011 தேர்தலின் வெற்றி வரலாறு, மீண்டும் 2019-ல் திரும்பி வரப்போகிறது. அப்படி நடக்கும் போது தமிழகம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். பிரதமர் மீண்டும் பதவி யேற்றவுடன், கூட்டணி கட்சியினர் ஒருங்கிணைந்து சென்று நதிநீர் இணைப்பு பற்றி வலியுறுத்துவோம்.

    ஸ்டாலின் சொல்கிற எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேறப்போவதில்லை. ஏனெனில் தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது. எனவே வாக்கினை இரட்டை இலைக்கு செலுத்துங்கள். இரட்டை இலைக்கு வாக்கு தருவீர்களா? செந்தில்நாதனை வெற்றி பெற வைப்பதோடு எதிர்த்து போட்டியிடுபவதை டெபாசிட் இழக்க செய்வீர்களா? (அப்போது ஆம் என்று மக்கள் கோ‌ஷம் எழுப்பினர்).

    அம்மாவின் (ஜெயலலிதா) ஆன்மாவுக்கு பதில் சொல்லும் வகையில், துரோகம் செய்தவருக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என்று உங்கள் வீட்டு பெண்ணாக, சகோதரியாக அத்தனை பேரையும் பார்த்து கேட்டு கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி வந்தாலே கட்டபஞ்சாயத்து தான் நடக்கும். ஆனால் இன்று தமிழகம் இன்று அமைதி பூங்காவாக இருக்கிறது என்தை எண்ணி பார்த்து கொள்ளுங்கள். டி.டி.வி. தினகரன் சொல்கிற வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. இன்று அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல் இருக்காங்க என்று சொல்லி வருகிறார். உண்மையான சிலிப்பர் செல்லே டி.டி.வி.தினகரன் தான். வேறு யாராவது அ.தி.மு.க.வை விட்டு சென்று கட்சி ஆரம்பித்தார்களா?. அவருக்கும் சரியான பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். #Vijayakanth #dmdk #premalatha

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். கடந்த பிப்ரவரி 16-ந்தேதி சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வந்ததால் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார்.

    இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே பிரேமலதா விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.

    கடைசி கட்டத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் வேனில் இருந்தபடியே ஓரிரு நிமிடங்கள் மெதுவாக பேசி சென்றார்.

    இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.


    இப்போது 4 தொகுதிகள் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் பிரசாரத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா செல்வதை தள்ளிப் போடலாமா அல்லது பிரசாரத்தை தவிர்க்கலாமா என்று பிரேமலதா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. #Vijayakanth  #dmdk #premalatha

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். #Vijayakanth #Loksabhaelections2019
    சென்னை:

    தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.

    வாக்களித்த பிறகு பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.

    தருமபுரியில் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் வாக்களித்தார்.  திருப்பூர் மாவட்டம் மூங்கில்தொழுவு பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சி. மகேந்திரன் வாக்களித்தார்.

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி, காவேரிப்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கரூர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெரிய திருமங்கலம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த நத்தம் வாக்குச்சாவடியில் பெரம்பலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்குப்பதிவு செய்தார்.

    தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரையில் உள்ள புனித தோமையர் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

    திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன் கரிசல்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.



    திமுக மகளிர் அணி தலைவியும், அக்கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளருமான கனிமொழி, தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார். #Vijayakanth #Loksabhaelections2019
    வடசென்னையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #DMDK #Viyakakanth
    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் சில காலமாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இதற்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை விஜயகாந்த் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாததும், பொது வெளியில் பேசாததும் அக்கட்சி தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, சாத்தூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா, கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து  வரும் 15-ம் தேதி தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம்  செய்வார் என கூறினார்.

    இந்நிலையில், சென்னையில் அ.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணி கட்சி வேட்பாளர்களான அ.தி.மு.க. தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பா.ம.க. மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

    வடசென்னை தொகுதியில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ஸ்டாலினுக்கு வாக்களிக்க வேண்டாம். அவருக்கு வாக்களித்தால் ஏமாந்து போவீர்கள் என தெரிவித்தார்.

    விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடம்  மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #DMDK #Viyakakanth
    தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    விழுப்புரம் :

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.



    நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    ×