என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 97736"
- கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
பென்னாகரம்:
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நேற்று தடை வித்தது. மறுஉத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.
மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இன்று ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் காவிரி ஆற்றிலும் குளித்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் தமிழக-கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்து கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து குறைந்தபோது வெளியே தெரிந்த பாறை திட்டுகள் அனைத்தும் மூழ்கிவிட்டன.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் கரையோர பகுதிகளான கோவில் பள்ளம், யானைக்கால் மடுவு, முத்தூர்மலை, கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக- கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டியது.
அதிகரித்து வரும் நீர்வரத்தை காவிரியின் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுன்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையொட்டி தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படியும், நீர்வரத்து அதிகரிப்பாலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடித்து வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சிலர் காவிரி ஆற்றங்கரையோரம் போலீசார் பாதுகாப்பையும் மீறி குளித்து சென்றனர்.
குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் பயணம் சவாரி செய்து காவிரி அழகை கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் கடைவீதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மீன்கடைகளில் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
ஒகேனக்கல் வனத்தையொட்டி ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நிலையத்தில் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.
இங்கு நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. இருள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்த ஊழியர்கள் நாய் என நினைத்து அதை விரட்டியபோது அது அப்பகுதியில் இருந்த வெளிச்சத்தின் வழியாக சீறிப்பாய்ந்து ஓடியது.
அப்போது தான் அது சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ஊழியர்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ஒகேனக்கல் வன அலுவலர் கேசவன் தலைமையிலான வனத்துறையினர், நீரேற்று நிலையத்தின் உள்ளே சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரின் தேடுதலில் சிக்கவில்லை.
இதனால் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் சிறுத்தை சென்ற பகுதியில் வலைகளை கட்டி பிடிக்க முயன்று வருகின்றனர்.
நீரேற்று நிலையத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதியில் புதர்கள் மண்டி கிடக்கிறது. எனவே சிறுத்தை அக்குழாயில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. சிறுத்தையை பிடிக்க வலைகள் கட்டப்பட்டுள்ளன. சிறுத்தையை பார்த்த ஊழியர்கள் கூறிய தகவல் அடிப்படையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட குட்டி சிறுத்தையாக இருக்கலாம்.
ஒகேனக்கல் பகுதியில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதே போல் தான் சிறுத்தையும் வந்திருக்கலாம். சிறுத்தை ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.
சிறுத்தை பிடிபட்ட பின்னர் அதை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு போய் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து 4600 கனஅடியாக சரிந்தது.
இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி கடந்த 2 தினங்களாக கர்நாடக-தமிழக எல்லை பகுதிகளிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4900 கனஅடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 5800 கனஅடியாக உயர்ந்தது.
தொடர்ந்து கர்நாடக- தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வள துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6100 கனஅடியாக வந்தது. நேற்று நீர்வரத்து சற்று சரிந்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இந்த நிலையில் அஞ்செட்டி, நாட்டறாம்பாளையம் மற்றும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
தீபாவளி பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மழையின் காரணமாக இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
இதனால் மீன் விற்பனை, உணவகங்கள் போன்ற கடைகளில் சுற்றுலா பயணிகளின் வெறிச்சோடி காணப்பட்டன. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வந்திருந்த குறைவான சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்தனர். #Hogenakkal
ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து அதிகரித்து 5 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் வருகிறது.
இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மிக குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தனர். அதே போல பரிசல் சவாரி செய்யவும், கூட்டம் குறைவாகவே இருந்தது. சமையல் மற்றும் மசாஜ் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வருமானம் இல்லை. #Hogenakkal
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சில நாட்கள் அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 4,800 கனஅடியாக குறைந்தது. இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்திருந்தனர். அவர்கள் மெயின் அருவி, மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பரிசலில் சவாரி செய்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் மீன் மார்க்கெட் களைகட்டி இருந்தது. மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள் ஆகியோருக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. பயணிகள் கூட்ட நெரிசலால் ஒகேனக்கல்லில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. #Hogenakkal
கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக வந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 4,900 கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #Hogenakkal
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். #Hogenakkal
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்குபாலம், முதலை பண்ணை ஆகிய பகுதிக்கும் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். #Hogenakkal
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.
மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி பகுதியில் மீன் சாப்பாடு சமைத்து வாங்கி கொண்டு குடும்பத்துடன் மீன் சாப்பாடு உணவை ரசித்து சாப்பிட்டனர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நேற்று முன் தினம் காலை வினாடிக்கு 21,700 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக வந்தது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். தொங்கு பாலத்தில் சென்று மகிழ்ந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்